சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கும் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு இப்படியொரு உறவுமுறையா...?

Published : Nov 06, 2019, 12:21 PM ISTUpdated : Nov 06, 2019, 12:54 PM IST
சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கும் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு இப்படியொரு உறவுமுறையா...?

சுருக்கம்

லெஜண்ட் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சிக்கும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனுக்கும் நெருங்கிய உறவுமுறை இருப்பது தெரியவந்துள்ளது.    

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருளை தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் தனது விளம்பரத்தால் பிரபலமாகியுள்ளார். அடுத்து திரைப்படத்துறையிலும் கால் பதிக்க இருக்கிறார். 

 திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சென்னை வந்த சரவணன் அருளின் தந்தையும், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனருமான சரவணா செல்வரத்தினம், கடுமையாக உழைத்து சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி கடையை உருவாக்கினார். நல்ல நிலைக்கு வந்ததும் தனது சகோதரர்களான யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினத்தை சென்னைக்கு அழைத்துவந்து தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார்.


அவர் இறந்த பிறகு சகோதரர்களுக்குள் சண்டை வந்ததால் சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. தற்போது லெஜெண்ட் சரவணா என்ற பெயரில் சரவணன் அருள் நடத்தி வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் விளம்பரங்களில் நடித்தபோது பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது.

சரி அதெல்லாம் தெரிந்த விஷயங்கள் தான். லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருளின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசையும் நெருங்கிய ரத்த சொந்தமாம். தமிழிசையின் தாயார், அருள் மனைவியின் தாயாருக்கு சின்னம்மாள் உறவுமுறை. அதாவது தமிழிசைக்கு அருள் மனைவி அக்காள் மகள் உறவு. அருள் அண்ணாச்சிக்கு தமிழிசை மாமியார் உறவுமுறை 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?