’முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்துக்கு ஏ சான்றிதழ் ஏன்?... அப்படி என்ன தான் இருக்கு படத்துல- ஓப்பனாக சொன்ன சாந்தனு

By Ganesh PerumalFirst Published Dec 6, 2021, 7:12 PM IST
Highlights

முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள ’முருங்கைக்காய் சிப்ஸ்’ (Murungakkai Chips), வருகிற டிசம்பர் 10-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் பாக்யராஜ். அவருடைய கதை, திரைக்கதை பாணியை யாராலும் அவ்வளவு எளிதியில் கையாள முடியாது. அவரைப் போலவே அவரது மகன் சாந்தனுவும், சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க முயன்று வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கசட தபற திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.

இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’. புதுமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கியுள்ள இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த இப்படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வருகிற டிசம்பர் 10-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இப்படத்துக்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தை பார்க்க அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், ‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதற்கான காரணத்தை நடிகர் சாந்தனு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “இப்படம் புதுமணத் தம்பதிகளுக்கிடையே முதல் இரவில் நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஆபாச காட்சிகள் எதுவும் இல்லை. இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளதால் மட்டுமே சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

click me!