
பணமோசடி வழக்கில் ஆஜராக ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டிசம்பர் 8ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். போதை மருந்து வழக்கிலும் தொடர்புடையவர். பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் நெருக்கமாக இருக்கிறவர். தற்போது அவருக்கு பிரபல மோசடி மன்னன் சுகேசுக்கும் இருக்கும் நட்பும், தொடர்பும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சுகேசுடன், ஜாக்குலின் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளிவந்துள்ளது. அதோடு சுகேஷ் ஜாக்குலினுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்திருப்பதும் வெளிவந்திருக்கிறது.
இந்த நிலையில் ஜாக்குலின் ரியாத்தில் நடக்கும் கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் உங்கள் மீது அமலாக்கத்துறை லுக்அவுட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் நீங்கள் எந்த வெளிநாட்டுக்கும் போக முடியாது என்று கூறி திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார் ஜாக்குலின். சுகேஷ் சந்திரசேகரின் மோசடி வழக்குகளில் ஜாக்குலின் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
சிறையில் இருந்தபோது சுகேஷ், ஜாக்குலினுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை அனுப்பினார் என்பதும் தெரிய வந்தது. ஜாக்குலினுக்கு ஜாமீனில் வெளியே வந்தபோது, மும்பையில் இருந்து சென்னைக்கு வாடகை விமானம் ஒன்றையும் சுகேஷ் முன்பதிவு செய்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன.
தொழிலதிபரின் மனைவியிடமிருந்து சுகேஷ் மிரட்டி வாங்கிய பெரும் தொகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடம் இருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.