Shanthnu Bhagyaraj : மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள சாந்தனு - கீர்த்தி தம்பதிகள் அங்கு 'கச்சா பாதம்' பாடலுக்கு குட்டை டவுசர் அணிந்து நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளனர்..
திரையுலகில் பல்வேறு புகழுக்கு சொந்தமான பாக்கியராஜ் - பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனு. சக்கரைக்கட்டி, அம்மாவின் கைபேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கும் டி.வி. தொகுப்பாளினியான கீர்த்தியை 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் விஜய் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
யங் செலிபிரிட்டி தம்பதியான சாந்தனு - கீர்த்தி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வருகின்றனர். மாஸ்டர் பட பாடல்களுக்கு இருவரும் சேர்ந்து நடனமாடி பட்டையைக் கிளப்பிய வீடியோக்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. பின்னர் லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் முடங்கி இருக்கும் சாந்தனு, மனைவியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கினர்.
வீட்டின் மொட்டை மாடியில் கீர்த்தியை வைத்து அழகாக வீடியோ ஷூட் செய்த சாந்தனு, மின்னலே படத்தில் புகழ்பெற்ற வெண்மதி, வெண்மதியே பாடலையும் சேர்ந்து எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் லைட்டா ஃபீல் பண்ணிட்டேன்... முரட்டு சிங்கிள்ஸ் மன்னிக்கவும்... குவாரண்டைன் பரிதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். கணவன், மனைவியின் அந்த ஜாலி வீடியோ லைக்குகலை குவித்தது.
இந்நிலையில் மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள சாந்தனு - கீர்த்தி தம்பதிகள் அங்கு எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்..அதன்படி 'கச்சா பாதம்' பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ வெளியாகிட்டுள்ளனர்...குளியல் உடை..குட்டை டவுசர் என அவர்களின் ஏகபோக நடன வீடியோ வைரலாகி வருகிறது...