
“என்னை அரசியலுக்கு இழுக்கவேண்டாம். முழுநேர நடிகராக இருந்து அப்பாவின் கலை உலக வாரிசாக மட்டுமே இருக்கவிரும்பிகிறேன்’ என்கிறார் கேப்டன் விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன்.
இன்று தனது 26 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் தந்தை விஜயகாந்த், தாய் பிரேமலதா மற்றும் கட்சிப் பிரமுகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார் சண்முகப்பாண்டியன். கொண்டாட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்று தெரிவித்தார்.
” பிரச்சாரத்திற்கு நீங்கள் செல்லவில்லையா என்று தொடர்ந்து என்னிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்படியே நான் வந்தால் அதையே நீங்கள் வாரிசு அரசியல் என்று விமர்சிக்கிறீர்கள். அதனால்தான் சொல்கிறேன். எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே இருக்கிறவர்கள் போதும். எனக்கு அரசியல் ஆசை இல்லை. அப்பாவின் சினிமா புகழைக் காப்பாற்ற ஒரு நல்ல நடிகனாகவே விரும்புகிறேன்” என்று நிருபர்களிடம் கூறினார் சண்முகப் பாண்டியன்.
அப்பாவின் பெயரைக் காப்பாற்ற சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்பும் சண்முகப் பாண்டியன் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்பது வேதனையுடன் குறிப்பிடத்தக்கது. 4 ஆண்டுகளுக்கு முன் ‘சகாப்தம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன சண்முக பாண்டியன் அடுத்து ‘மதுர வீரன்’ என்ற படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். மூன்றாவதாக பூஜை போடப்பட்ட ‘தமிழன் என்று சொல்’ படம் அப்படியே கிடப்பில் இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.