Gentleman2 update:ஏற்றி விட்டவரை மறந்த அர்ஜுன், ஷங்கர்!கடுப்பாகி ஜெண்டில்மேன்2 வை துவக்கிய தயாரிப்பளார்..

By Kanmani PFirst Published Jan 22, 2022, 2:32 PM IST
Highlights

Gentleman2 update : துவக்கத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் அர்ஜுனிடம் தயாரிப்பாளர் தரப்பு கலந்தாலோசித்துள்ளனராம்.. ஆனால் அவ்விருவரும் வேறு கமிட்மெண்டில் இருப்பதால் ஜெண்டில்மேன் 2-ல் இணைய தயக்கம் காட்டியதாக சொல்லப்படுகிறது.. இதன் காரணமாக கடுப்பான தயரிப்பாளர் அவர்களை உயர்த்தியது போலவே புது முகங்களை கொண்டுவருவேன் என மார்தட்டியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது..

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா, சரண்ராஜ், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜென்டில்மேன்'. கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாகவே ஷங்கர் இயக்குநராக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த படத்தில் அர்ஜுன் திருடனாக தோன்றி செம மாஸ் கட்டியிருந்தார்..ஏஆர் ரகுமான் இசையில் ஒவ்வொரு பாடல்களும் ஹிட் அடித்தன..அதோடு கவுண்டமணி, செந்தில் காமினேஷன் காமெடிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.. 1993-ல் நல்ல பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்த ஜெண்டில்மேன் படத்தின் இரண்டாம் பக்கத்தை ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வருகின்றனர். 

இந்நிலையில் தயாரிப்பாளர் ஜென்டில்மேன் 2 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் கே.டி. குஞ்சுமோன். மலையாள சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த கேடி குஞ்சுமோன் தமிழ் சினிமாவில் வசந்தகால பறவை என்ற படத்தின் மூலமாக களமிறங்கினார். அந்த படத்தினை பவித்திரன் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன் மற்றும் என்றென்றும் காதல் போன்ற படங்களை அவர் தயாரித்து இருக்கிறார். அவரது படங்களில், குறிப்பாக பாடல்களுக்கு அவர் அதிக அளவு செலவு செய்வார். எடுத்துக்காட்டாக ஊர்வசி ஊர்வசி பாடலைக் கூறலாம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமா துறைக்கு தயாரிப்பாளராக அவர் ஜென்டில்மேன் 2 படத்தின் மூலமாக திரும்ப இருக்கிறார்.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் நவீன தொழில்நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் 'ஜென்டில்மேன் 2' உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாராகவுள்ளது.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 'ஜென்டில்மேன் 2' பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். உலகம் முழுவதும் முதலில் திரையரங்குகளில் வெளியான பிறகுதான் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படும்". இவ்வாறு கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார்.

அவர் அறிவிப்பின் படி ஜெண்டில்மேன் 2 வில் அர்ஜுன், ஷங்கர் என முந்தைய கூட்டணி இல்லை என்பதும் புதிய முகங்களை அறிமுகப்படுத்த தயரிப்பளார் முனைப்பு காட்டி வருவதும் தெரிகிறது..  ஜென்டில் மேன் போன்ற படங்களின் மூலம் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்துள்ள அர்ஜுன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளின் கலக்கி வருகிறார். இவர் சமீபத்தில் மரைக்காயர் படத்தில் நடித்திருந்தது குறித்து ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டார். அதோடு தற்போது கீழடி, மேதாவி, விருன்னு உள்ளிட்ட படங்களில் பிசியாக உள்ளார் அர்ஜுன்..

அதே போல இயக்குனர் ஷங்கர்.. இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ஒரு படம் என மாஸ் காட்டி வருகிறார்.. ஜெண்டில்மேன் படம் ஹிட்டடிக்க முக்கிய காரணமான இயக்குனரும், நடிகரும் இல்லாமல் பார்ட் 2 உருவாவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.. ஆனால் Gentleman2 update : துவக்கத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் அர்ஜுனிடம் தயாரிப்பாளர் தரப்பு கலந்தாலோசித்துள்ளனராம்.. ஆனால் அவ்விருவரும் வேறு கமிட்மெண்டில் இருப்பதால் ஜெண்டில்மேன் 2-ல் இணைய தயக்கம் காட்டியதாக சொல்லப்படுகிறது.. இதன் காரணமாக கடுப்பான தயரிப்பாளர் அவர்களை உயர்த்தியது போலவே புது முகங்களை கொண்டுவருவேன் என மார்தட்டியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது..

அந்த வகையில் தற்போது ஜெண்டில்மேன் 2 விற்கு இசையமைக்க புதுமுக இசையமைப்பாளரை தயாரிப்பளார் தேடிவருகிறார்.. அதற்காக போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளார்.. இசையமைப்பாளரை கண்டுபிடிப்பவர்களுக்கு தங்க காசு அளிக்கப்படும் என்று தயாரிப்பளார் கே டி குஞ்சுமோன் அறிவித்துள்ளார்.

click me!