சிம்புவுடன் ஷனம் ஷெட்டிக்கு தப்பான உறவு..? இதற்காகத் தான் கழற்றி விட்டாரா தர்ஷன்..?

Published : Feb 01, 2020, 11:14 AM IST
சிம்புவுடன்  ஷனம் ஷெட்டிக்கு தப்பான உறவு..? இதற்காகத் தான் கழற்றி விட்டாரா தர்ஷன்..?

சுருக்கம்

சிம்புவுடன் இருந்த தப்பான உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு தன்னை கழற்றி விட்டதாக நடிகை ஷனம் ஷெட்டி தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.   

சிம்புவுடன் இருந்த தப்பான உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு தன்னை கழற்றி விட்டதாக நடிகை ஷனம் ஷெட்டி தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். 

தர்ஷன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்து, தர்ஷன் – சனம் ஷெட்டி இருவரும் காதலர்களாக இருந்து நிச்சயதார்த்தம் வரை சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேறிய பின் இன்ஸ்டாகிராமில் பார்க்கும் போது சனம் ஷெட்டி, சிம்புவுடன் இருப்பது போன்று ஒரு படத்தைப் பார்த்துள்ளார். மேலும் நிச்சல் குளத்தில் பிகினி உடையில் ஒரு பேட்டியும் சனம் ஷெட்டி கொடுத்து இருந்தார். இது இரண்டும் தான் இவர்கள் இருவரும் பிரிந்ததற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த சனம் ஷெட்டி, சிம்புவுடன் மகா படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை அடுத்து அவரை சந்திக்கும் போது நட்பு ரீதியாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது தான் அந்த படம். பொதுவாக இது வெளியில் பிரபலங்களைச் சந்திக்கும் போது படங்களை எடுத்து பகிர்வது போல தான் அது. ஆனால் நான் நடிக்கும் படங்களில் ஹீரோக்களுடன் எனக்கு தப்பான உறவு இருப்பதாக தர்ஷன் சந்தேகப்படுகிறார். பிக்பாஸ் போட்டிக்கு முன் நான் நடிகை என்பது அவருக்கு தெரியாதா? என்னை அனுபவித்து விட்டு இப்போது வேண்டாம் என்கிறார்.

பிக்னியில் பேட்டி கொடுத்தது, அது ஒரு போட்டோ ஷூட்டிங்கின் போது நடைபெற்றது. நடிகைகளுக்கு அது சாதாரணமான ஒன்று. கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்து ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் சினிமா நடிகர்களையும் தன்னையும் இணைத்து தவறாகக் கூறி திருமணத்தை நிறுத்தினார் தர்ஷன்.

 

இதனால் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனது குடும்பமே மன உளைச்சலுக்குள்ளானது. திருமணத்தை ஏன் நிறுத்தினாய் என்று தர்ஷனிடம் ஏன் எனக் கேட்டதற்கு என்னுடைய வழியில் குறுக்கே வரக்கூடாது. அப்படி வந்தால் என்னுடைய ரசிகர்கள் சமூகவலைதளத்தில் உன்னை தவறாக சித்தரிப்பார்கள் என்று என்னை மிரட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரை அனுப்ப விண்ணப்பம் அனுப்பியது முதல் அவர் புகழ்பெற்றது வரை எனக்கு பங்கு உண்டு. அவர் தேவைக்காக ரூ.15 லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்திவிட்டார்’’ எனக் கதறுகிறார் ஷனம் ஷெட்டி. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!
அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!