தப்பு தப்பா பேசி கல்யாணத்தை நிறுத்திய தர்ஷன்! காதலனுக்காக கமிஷ்னர் அலுவதாகாலத்தில் கதறிய சனம் ஷெட்டி..! வெளியான பகீர் உண்மைகள்!

Published : Jan 31, 2020, 06:46 PM IST
தப்பு தப்பா பேசி கல்யாணத்தை நிறுத்திய தர்ஷன்!  காதலனுக்காக கமிஷ்னர் அலுவதாகாலத்தில் கதறிய சனம் ஷெட்டி..! வெளியான பகீர் உண்மைகள்!

சுருக்கம்

பிரபல நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி அவருடைய காதலர் தர்ஷன், திருமண நிச்சயதார்தம் முடிந்த பின், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரபல நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி அவருடைய காதலர் தர்ஷன், திருமண நிச்சயதார்தம் முடிந்த பின், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் இலங்கை மாடல் தர்ஷன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே வர முக்கிய காரணம் கூட, நடிகை சனம் ஷெட்டி தான். மேலும் தர்ஷனுக்கு உதவியாக, பண விஷயத்தில் மட்டும் இன்றி, பல்வேறு வகையில் உதவிகள் செய்துள்ளதை அவரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

சனம் ஷெட்டி எதிர்பார்த்தது போல், பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் தர்ஷனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில், திடீர் என தர்ஷனிடம் ஏற்பட்ட சில மாற்றத்தினாலும், அவர்... சேப் கேம் விளையாடுவது போல் மக்களுக்கு தோன்றியதால் ஓட்டுகள் குறைவாக பெற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் 100 ஆவது நாளில், டைட்டில் வழங்கும் விழாவின் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உலக நாயகன் கமலஹாசன் ராஜ் கமல் பிலிம்ஸ் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில் தர்ஷன் நடிப்பார் என அறிந்தார். இதை தொடர்ந்து கடந்த வாரம், தன்னுடைய முதல் படம் பற்றி விரைவில் அறிவிப்பேன் என தர்ஷன் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி, சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.  

கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் தனக்கும் தர்ஷனுக்கு பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில்,  சினிமா நடிகர்களையும் தன்னையும் இணைத்து தப்பு தப்பாக பேசி, திருமணத்தை நிறுத்தினார்.

 இது தன்னை மட்டும் இன்றி தன்னுடைய குடும்பத்தையும், மனஉளைச்சலுக்கு ஆளாக்கியது.  திருமணத்தை நிறுத்தியதற்காக காரணத்தை தர்ஷனிடம் கேட்டதற்கு இனி என்னுடைய வழியில் குறுக்கே வரக்கூடாது. அப்படி வந்தால் என்னுடைய ரசிகர்கள் சமூகவலைதளத்தில் உன்னை தவறாக பேசுவார்கள் என்று என்னை மிரட்டினார். 

தர்ஷன் தேவைக்காக தற்போது வரை 15 லட்சம் செலவு செய்திருப்பதாகவும். அவர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாகவும், கண் கலங்கியவாறு கமிஷ்னர் அலுவலகத்தில் பல உண்மைகளை வெளியிட்டு கதறினார் சனம் ஷெட்டி. எனவே, காவல் துறையினர் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க தன்னுடைய புகாரில் கூறியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒசூரில் கடும் குளிரிலும் சால்வையை போர்த்திக் கொண்டு ஒத்திகை; இளையராஜாவின் செயலை வியந்த டீம்!
அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!