'குட் பேட் அக்லி' படத்தை மகளுடன் ரோகிணி திரையரங்கில் பார்த்த ஷாலினி! வைரல் வீடியோ!

Published : Apr 10, 2025, 12:18 PM ISTUpdated : Apr 10, 2025, 12:52 PM IST
 'குட் பேட் அக்லி' படத்தை மகளுடன் ரோகிணி திரையரங்கில் பார்த்த ஷாலினி! வைரல் வீடியோ!

சுருக்கம்

அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள,  'குட் பேட் அக்லி' படத்தை அவரின் மனைவி ஷாலினி, மகளுடன் சேர்ந்து ரோகிணி திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

விடாமுயற்சி தோல்வி:

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். தற்போது கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வரும் அஜித், கார் ரேஸுக்கு முன்பு இரண்டு படங்களை நடித்து முடித்து விட்டு தான் சென்றார். அதன்படி, இவர் நடித்திருந்த 'விடாமுயற்சி' திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்த இந்த படத்தை, லைகா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில்... கலவையான விமர்சனங்களுடன் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

'குட் பேட் அக்லி':

கிட்ட தட்ட ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், ரூ.135 கோடி மட்டுமே பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்திருந்தாலும், வியாபார ரீதியாக வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்த படம் வெளியான 2 மாதத்தில், இன்று அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள மற்றொரு திரைப்படம் தான் 'குட் பேட் அக்லி'. விஷால் - எஸ்.ஜே.சூர்யாவை வைத்து, வித்தியாசமான கதையை இயக்கி ரூ.100 கோடி வசூல் செய்த 'மார்க் ஆண்டனி' படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து 'குட் பேட் அக்லி'  படத்தை இயக்கி இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். 

எதிர்பார்ப்பை எகிற வைத்த குட் பேட் அக்லி:

முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக... ஆக்ஷனோடு கூடிய செண்டிமெண்ட் படமாக இப்படம் இருக்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறி இருந்தார். 'குட் பேட் அக்லி' படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஒரு சிலர் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்கள் ட்ரைலருக்கு கிடைத்த போதும்... பக்கா மாஸாக இருப்பதாகும் ரசிகர்கள் கூறி வந்தனர்.

God Bless U மாமே! அஜித்தின் குட் பேட் அக்லிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி

'குட் பேட் அக்லி படத்தை' மகளுடன் பார்த்த ஷாலினி:

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில், முதல் காட்சி போடப்பட்ட நிலையில்... ரசிகர்கள் ஆரவாரத்தோடு படத்தை கண்டு ரசித்து வருகிறார்கள். சென்னையில் உள்ள பல திரையரங்குகளில், ரசிகர்களோடு இணைந்து பல பிரபலங்களும் படத்தை பார்த்து ரசித்து வரும் நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய கணவர் அஜித்தின் 'குட் பேட் அக்லி படத்தை' மகளுடன் சென்று கண்டு ரசித்துள்ளார். ( Actress Shalini Watches 'Good Bad Ugly' with Daughter at Chennai's Rohini Theatre)  ரசிகர்களோடு சேர்ந்து இவர் படம் பார்த்த போது எடுக்கப்பட்ட வீடியோஸ் மற்றும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது:

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம், தொடந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதே நேரம் ரசிகர்களுக்கு ஏற்ப எடுக்கப்பட்டிருந்தாலும்  கொஞ்சம் கிரிஞ்சாக உள்ளதாகவே கூறி வருகிறார்கள். இந்த படத்தில் 'விடாமுயற்சி' படத்தை தொடர்ந்து திரிஷா ஹீரோயினாக நடிக்க, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!