பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்னத்தம்பி' சீரியலில் மாடர்ன் கலந்த குடும்ப பெண்ணாக நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பவானி ரெட்டி.
தெலுங்கில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையான இவர் தற்போது தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது தமிழ் சின்னத்திரையில், நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்.... 'சின்னத்தம்பி' ஷூட்டிங் ஸ்பாட்டில், தன்னுடைய திருமண காட்சி படப்பிடிப்பு எடுத்துக்கொண்டிருந்தபோது, தன்னுடைய புடவையில் சரியாக பின் போடவில்லை. அதனை நானும் கவனிக்க வில்லை. டேக் என சொல்லியதும் தன்னுடைய புடவை நழுவி கீழே விழுந்து விட்டது. அனைவர் மத்தியிலும் இப்படி நடந்தது தனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.
பின் படக்குழுவில் இருந்தவர்கள் மற்றும் சக நடிகர்கள் தன்னை ஒரு வழியாக தேற்றி, மீண்டும் அந்த காட்சியில் நடிக்க வைத்தனர். அதனை இப்போது நினைத்தாலும் அசிங்கமாக இருக்கிறது என பவானி ரெட்டி கூறியுள்ளர்.