கணவரின் தற்கொலைக்கு காரணம் இதுதான்...? முதல் முறையாக கண்ணீர் பக்கங்களை கூறிய நடிகை பவானி ரெட்டி..!

 
Published : May 04, 2018, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
கணவரின் தற்கொலைக்கு காரணம் இதுதான்...? முதல் முறையாக கண்ணீர் பக்கங்களை கூறிய நடிகை பவானி ரெட்டி..!

சுருக்கம்

seriyal actress bavani reddy about husband death

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 'ரெட்டைவால் குருவி', சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தற்போது தமிழிலும் மிகவும் பிரபலமாக உள்ளார். 

இவர் தற்போது நடிகர் பிரஜன் நடித்து வரும், 'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவருடைய கணவர் பிரதீப், கடந்த ஆண்டு திடீர் என தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். கணவர் இறந்து ஒரு வருடம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில் மீண்டும் பவானி ரெட்டி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். இதனால் இவரை பலர் விமர்சித்தனர். 

மேலும் இவர், சமீப காலமாக பேட்டிகள் கொடுப்பதை கூட தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஒரு வருடதிற்கு பின் தன்னுடைய கணவர் தற்கொலை குறித்து முதல் முறையாக பேசியுள்ளார் பவானி ரெட்டி. இது குறித்து இவர் பேசுகையில்...

'நானும் என்னுடைய கணவர் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டோம்' அனைத்து கணவன் மனைவிக்கும் உள்ள சாதரான பிரச்சனைதான் எனக்கும் என் கணவருக்கும் இருந்தது. ஆனால் இதற்காக அவர் தற்கொலை முடிவு எடுப்பார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

என்னுடன் மிகவும் நெருக்கமாக இருந்த என்னுடைய கணவர் திடீர் என தற்கொலை செய்துக்கொண்டார், அவர் உயிரோடு இல்லை என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மேலும் அவருடைய மரணத்திற்கு பலர் பல காரணங்கள் கூறினார்கள். என்னை விமர்சித்தனர், அது தன்னை மிகவும் பாதித்து. இதனால் இது குறித்து நான் யாருடனும் பேசுவதை கூட தவிர்த்து விட்டேன். மேலும் தன்னுடைய கணவர் மரணத்தில் இருந்து இன்னும் நான் வெளியே வரவில்லை, என கூறியுள்ளார். 

அதே போல் தன்னுடைய கணவரின் இழப்பு தனக்கு எப்படி பட்ட வலியை கொடுத்துள்ளது என தனக்கு மட்டும் தான் தெரியும் என பவானி ரெட்டி மிகவும் வருத்ததுடன் தன்னுடைய கண்ணீர் பக்கங்கள் குறித்து பேசியுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!