
சில கட்டுப்பாடுகளுடன் ஜூன் 10 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என நடிகை குஷ்பு மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் தெரிவித்திருந்த நிலையில், நேற்று சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் துவங்கியது. இதனால் அணைத்து சீரியல் தயாரிப்பு நிறுவனங்களும் உரிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளனரா என அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளார் குஷ்பு.
சில விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகளுடன் நேற்று ஜூன் 10 ஆம் தேதி முதல், சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் நடைபெறும் என்றும், நடிகர் - நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே சாப்பாடு கொண்டுவர வேண்டும் என்றும் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிகபட்சமாக 60 பேர் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்றும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. பின் சின்னத்திரை ஷூட்டிங் பணிகள் தொடங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் சின்னத்திரை தயாரிப்பாளர்களான சங்க தலைவர் சுஜாதா, செயலாளர் குஷ்பு, முன்னாள் தலைவர் ராதிகா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தொழிநுட்ப கலைஞர்கள் அல்லாமல் , 40 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகளை துவங்க முடிவு செய்துள்ளதாகவும். அவ்வப்போது படப்பிடிப்பு தளங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் துவங்கிய நிலையில், படப்பிடிப்பு தளங்களில்... முறையாக வழிமுறைகள் பின்பற்ற படுகிறதா என, சுஜாதா, குஷ்பு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அனைவரும் அரசாங்கத்தில் விதியை பின்பற்றி படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை நடிகை குஷ்பு அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.