
இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெராப், பத்மலட்சுமி உட்பட பலர் நடித்த பூம் படம் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்த வைத்த இவர், தற்போது இந்தி சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவர். ரேஸ், சிங் இஸ் கிங், பாடிகார்ட், அக்னிபாத், ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மறைந்த நடிகர் இர்ஃபான் கானுடன் நடித்த அங்ரேஸி மீடியம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!
கத்ரீனா கே பியூட்டி என்ற சொந்தமாக அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்காக கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட விளம்பரத்தில் கூட கத்ரீனாவுடன் சேர்ந்து நம்ம லேடி சூப்பர் ஸ்டார் விளம்பர படங்களில் நடித்திருந்தார். தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் இருக்கும் கத்ரீனா பாத்திரம் கழுவது, வீட்டை பெருக்குவது போன்ற வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இதெல்லாம்... வைரலாகும் “அன்றே கணித்த சூர்யா” மீம்ஸ்... ஸ்பெஷல் தொகுப்பு...!
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் கத்ரீனா அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் கடலுக்கடியில் கத்ரீனா கைஃப் செய்த துணிச்சலான காரியத்தின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!
கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு நம்மை விட பல மடங்கு பெரிதான புள்ளி சுறாவுடன் நீச்சலில் போட்டி போடும் வீடியோ தான் அது. சுறாவிற்கு மிகவும் அருகில் எவ்வித பயமும் இன்றி, ஹாயாக நீந்தி செல்லும் கத்ரீனா கைஃப்பை பார்க்கும் போது நமக்கு தான் அல்லுதெறிக்கிறது. ஆனால் அவரோ ஏதோ நீமோ மீனுடன் நீந்தி விளையாடுவது போல, அசல்டாக சுறாவுடன் நீந்துகிறார். கத்ரீனாவின் இந்த அசாத்திய வீடியோவை இதுவரை கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் பார்த்து மிரண்டு போயுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.