
ஆலியா மானசா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வரும் “ராஜா ராணி” சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் பிரபலமான ஆலியாவிற்கு, என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது டப் ஸ்மாஷ் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் பிரபலம். ஆலியா நடித்துவரும் சீரியலில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவிற்கும், ஆலியாவிற்கும் இடையே காதல் என கிசுகிசு வெளியாகி இருந்தது.
ஆலியாவின் பிறந்தநாளின் போது கூட, சஞ்சீவ் வித்தியாசமான முறையில் 25 வித்தியாசமான பரிசுகளை, வெவ்வேறு இடத்தில் வைத்து கொடுத்து அசத்தினார். இதை எல்லாம் வைத்து ஆலியாவிற்கும் சஞ்சீவிற்கும் காதல் என செய்திகள் வெளியாகின.
இதற்கு பதிலளித்த ஆலியா மானசா, எனக்கும் சஞ்சீவிற்கும் இடையில் இருப்பது நல்ல நட்பு மட்டுமே அதை தவறாக பேசாதீர்கள் என டிவிட்டரில் கூறி இருந்தார்.
இப்போது சோகமான புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பதிவிட்டு “எனக்கு என்னுடைய சந்தோஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்” என கேட்டிருக்கிறார். இவர் இவ்வாறு சோகமாக இருப்பது, இந்த காதல் விவகாரம் பற்றிய கிசுகிசுவால் தான். என தோன்றும் விதமாக இருக்கிறது அவரின் இந்த ட்வீட்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.