திரைப்பட வாய்ப்பு கேட்டு தொலைக்காட்சி பேட்டியின் போது, கண்ணீர் சிந்திய நடிகை;

 
Published : Jun 08, 2018, 05:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
திரைப்பட வாய்ப்பு கேட்டு தொலைக்காட்சி பேட்டியின் போது, கண்ணீர் சிந்திய நடிகை;

சுருக்கம்

actress cried on interview to get film chance

சென்னையை பூர்வீகமாக கொண்ட நடிகை சார்மிளா, தமிழில் ”ஒயிலாட்டம்” திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். தமிழில் இவர் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும், பல தமிழ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். மம்மூட்டி மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி மலையாள நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், முதலில் பாபு ஆண்டனி என்ற மலையாள நடிகரை காதலித்தார்.

அதன் பிறகு  சில பிரச்சனைகளால் அவரை பிரிந்து கிஷோர் சத்யா எனும் நடிகரை மணந்து கொண்டார். அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து கொண்டு, ராஜேஷ் எனும் என்ஜினேயரை மணந்து கொண்டார். 2006 ஆம் ஆண்டு ராஜேஷையும் விவாகரத்து செய்துவிட்டு இப்போது தனியாக வாழ்ந்துவருகிறார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

சார்மிளா பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றின் போது, சார்மிளா கண்ணீர் மல்க சினிமா வாய்ப்பு கேட்டிருக்கிறார். தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள். அப்போது தான் எனது வயதான அம்மாவையும், என் மகனையும் கவனித்து கொள்ள என்னால் முடியும். என அப்போது தெரிவித்திருக்கிறார் சார்மிளா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்