ஒரே மாதத்தில் 7 கிலோ எடை குறைத்த பிரபல சீரியல் நடிகை .. இதுதான் விஷயமா?!

Published : Jul 04, 2023, 04:11 PM ISTUpdated : Jul 04, 2023, 04:17 PM IST
ஒரே மாதத்தில் 7 கிலோ எடை குறைத்த பிரபல சீரியல் நடிகை .. இதுதான் விஷயமா?!

சுருக்கம்

 பிரபல சீரியல் நடிகை ஸ்ரேயா அஞ்சன் ஒரே மாதத்தில் 7 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார். இதுகுறித்து அவரே கொடுத்த டிப்ஸ் இதோ..

சின்ன திரை மூலம்  பிரபலமானவர் தான் ஸ்ரேயா அஞ்சன். இவர் அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த திருமணம் என்ற சீரியல் தான் இவரது வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக இருந்தது. இவர் சின்னத்திரைக்கு அறிமுகமான முதல் சீரியல் இதுதான்.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் சித்து சித். இந்த சீரியலுக்குப் பிறகு இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாகவே உள்ளது. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடியாக மாறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ரேயா, ஜீ தமிழில் ரஜினி என்ற தொடரில் நடித்து வந்தார். தற்போது அந்த தொடரும் முடிவடைந்தது.

இந்நிலையில் அதிக எடையில் இருந்த ஸ்ரேயா தனது உடல் எடையை குறைப்பதற்காக தீவிர முயற்சி எடுத்துவந்தார். அதன் விளைவாக தற்போது அவர் ஒரு மாதத்தில் 7 கிலோ வரை குறைந்துள்ளார்.

உடல் எடையை குறைக்க ஷ்ரேயா பின்பற்றிய வழிகள்:

  • உடல் எடையை குறைக்க அவர் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த சப்ஜா விதை, தேன், பப்பாளி உள்ளிட்டவற்றை சேர்ந்து சாப்பிட்டார்.
  • அதுபோலவே பாலக்கீரை-புதினா சேர்ந்து நன்கு அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் குடிதுள்ளார். மற்றும் நிறைய காய்கறி வகைகளையும் சாப்பிட்டார்.
  • உடல் ஆரோக்கியத்திற்காக மாலை நேரத்தில் ஹெல்த்தி ஸ்நாக்ஸாக வேக வைத்த கறுப்பு கடலை, சுண்டல் எடுத்துள்ளார். அதுபோல், காலை 20 நிமிடம் நடைபயிற்சி செய்துள்ளார்.

இதையும் படிங்க: “தண்ணீர் விரதங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.. ஆனால்..” புதிய ஆய்வில் வெளியான தகவல்..

இவை அனைத்தையுமே ஸ்ரேயா அஞ்சன் ஒரே மாதத்தில் செய்து 7 கிலோ வரை தனது எடையை குறைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்