
சமீபகாலமாக சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரபல நடிகை மைனா என்கிற நந்தினியின் காதல் கணவர் கார்த்திக் சமீபத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தற்கொலைக்கு முன்னர் கார்த்திக் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்று எழுதி வைத்திருந்தார். மேலும் தன்னை தன்னுடைய முன்னாள் காதலி வெண்ணிலாவின் பக்கத்தில் புதைக்க வேண்டும் என மிகவும் உருக்கமாக எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் நந்தினி மற்றும் அவரது தந்தை இருவர் மீதும் கார்த்திக்கின் தாயார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் இருவரும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நந்தினியின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது அந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் எந்த நேரமும் நந்தினியும் அவரது தந்தையும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இருவரும் உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.