ஆசிரியர்களால் கூட ஒதுக்கப்பட்ட தீபா..! இது என் குத்தமா..? 

 
Published : Jul 29, 2018, 11:08 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
ஆசிரியர்களால் கூட ஒதுக்கப்பட்ட தீபா..! இது என் குத்தமா..? 

சுருக்கம்

serial actress meena avoding for teachers also why?

பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி, தற்போது நடிகர் கார்த்திக்கு அக்காவாக 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வெள்ளித்திரையில் நன்கு அறியப்பட்டிருக்கிறவர் நடிகை தீபா.

இவருக்கு இந்த பெயர் வர காரணம், தீபாவளி தினத்தில் பிறந்தாராம். அதனால் இவருடைய பெற்றோர் இவருக்கு தீபா என்று பெயர் வைத்து விட்டதாக கூறுகிறார்.

மேலும் பெயர் எந்த அளவிற்கு, பிரகாசமாக உள்ளதோ.. அதே போல் தன் வாழ்க்கை இல்லை , காரணம் பள்ளி பருவத்தில் இருந்தே நிறத்தை சுட்டி காட்டி சக மாணவர்கள் முதல், ஆசிரியர்கள் வரை இவரை புறக்கணித்து உள்ளார்களாம். இதனால் டான்ஸ் போன்ற கலைகளில் ஆர்வம் இருந்தும் அவற்றில் இவர் பங்கேற்றது இல்லை.

ஒரு நிலையில் தன்னை ஒதுக்கி வைக்கும் பள்ளிக்கூட படிப்பு தனக்கு தேவை இல்லை என, 11 ஆம் வகுப்பிலேயே தன்னுடைய படிப்பை நிறுத்தி கொண்டார். 

பள்ளியில் இருந்து நின்றதும், தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மூன்று வருஷம் படித்தார், பின் டான்ஸ் டீச்சர் கோர்ஸ் முடித்து, சென்னை மியூசிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆடல் கலைமணி, நாட்டுவாங்க நான்மணி என்று இரண்டு கோர்ஸ் சேர்த்து 5 வருடம் படிப்பு படித்து முடித்தார். 

இதற்கு பிறகு தான் துவங்கியுள்ளது இவரது சின்னத்திரை பயணம். 'மெட்டி ஒலி' சீரியல் ஆடிஷன் சென்று தேர்வானதும், வீட்டில் நடிக்க சம்மதம் கொடுக்கவில்லை. நடிக்கவே கூடாதுனு அப்பா அடித்ததில் இரண்டு நாட்கள் எழுந்திருக்க கூட முடியலையாம். 

என்னால் உங்களுடைய பெயர் கெடாது என வாக்குருதி கொடுத்து, எதிர்ப்பை மீறி 'மீனா' என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து 'மலர்கள்' 'மேகலா' , 'கோலங்கள்' என சீரியலில் வரிசையாக நடிக்க தொடங்கினார். பின் திருமணமும் ஆனது. 

திருமணத்திற்கு பிறகும் நடிக்க சம்மதம் தெரிவித்த இவருடைய கணவர், சின்னத்திரையை தொடர்ந்து 'வெடிகுண்டு முருகேசன்' , 'மாயாண்டி குடும்பத்தினர்' போன்ற திரைப்படங்களிலும் இவரை நடிக்க அனுமதித்தார்.

இதுவரை சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே முகம் காட்டி வந்த இவர், தன்னுடைய திறமையின்  மூலம் தற்போது பெரிய படஜெட் படங்களிலும் தலைகாட்ட துவங்கியுள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்ததாக நடிகர் பிரபுதேவா நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

சாதிக்க, விடாமுயற்சியும், திறமையும் இருந்தால் போதும் அழகு முக்கியம் இல்லை என்று கூறியுள்ளார் இந்த கருப்பு அழகி, மேலும் கருப்பா பொறந்தது என் குத்தாம என தன்னை கருமை என்று ஓதிக்கியவர்களை நோக்கி ஒரு கேள்வியும் வைத்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!