பிஸியான நடிகையாக இருந்து வந்த 'மைனா' நந்தினி, சென்னையில் உடற்பயிற்சி மையம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னையில் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு அவரின் கணவர் கார்த்திகேயன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து சிறிதுகாலம் நடிப்புத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த மைனா, மீண்டும் விஜய் டிவி., ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கி, தற்போது பிஸியான நடிகையாக உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்தத் தொடரில் அவர் நடித்த 'மைனா' கேரக்டர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், அவருக்கு நிஜ பெயருக்கு முன்னால் ரீல் பெயர் ஒட்டிக்கொள்ள அனைவராலும் மைனா என்றே அழைக்கப்படுகிறார். சின்னத்திரையில் நடித்தாலும் 'வம்சம்' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான 'மைனா' நந்தினி, 'கேடி பில்லா கில்லா ரங்கா' படத்திலும் நடித்தார். தொடர்ந்து, விஜய் டி.வி.யில் 'கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியில் நடுவராகவும், ஜீ தமிழில் குழந்தைகள் நிகழ்ச்சி, டார்லிங் டார்லிங் தொடரிலும் நடித்துவந்தார். இப்படி பிஸியான நடிகையாக இருந்து வந்த 'மைனா' நந்தினி, சென்னையில் உடற்பயிற்சி மையம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சென்னையில் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு அவரின் கணவர் கார்த்திகேயன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து சிறிதுகாலம் நடிப்புத்துறையிலிருந்து ஒதுங்கியிருந்த மைனா, மீண்டும் விஜய் டிவி., ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடிக்கத் தொடங்கி, தற்போது பிஸியான நடிகையாக உள்ளார். சின்னத்திரை மட்டுமல்லாமல், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் தனது காமெடியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். கணவரை இழந்து சிங்கிளாக வாழ்ந்து வந்த 'மைனா' நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு, நாளடைவில் காதலாக மலர, இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,யோகேஸ்வரன் - 'மைனா' நந்தினி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில், பதிவு ஒன்றை எழுதியுள்ளனர். அதில், தங்களுக்கு திருமணம் நிச்சயமானதாக குறிப்பிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். யோகேஸ்வரன் 'நாயகி', 'சத்யா' உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திருமணம் சோகத்தில் முடிந்த நிலையில்,'மைனா' நந்தினியின் 2-வது திருமண வாழ்க்கையாவது இனிமையாக அமைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.