
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த நாடகத்தில் விறு விறுப்புக்கு மிக முக்கிய காரணிகளாக இருந்தவர்கள் அதில் வரும் கண்ணம்மா மற்றும் வெண்பா . இந்த இரண்டு பெண் கதாப்பாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம். வில்லி வெண்பாவாக பரினாவும், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் உடைத்து வந்தனர். தெலுங்கு ரீமேக்கான இந்த நடக்கத்திலிருந்து சமீபத்தில் ரோஷினி ஹரிப்ரியன் விலகி விட்டார். அவருக்கு பதிலாக தற்போது வினுஷா நடித்து வருகிறார்.
இதற்கிடையே வெண்பாவாக வந்த பரினா கர்ப்பமாக இருந்தார். அவரது வலை காப்பு வீடியோ சமூக வலைதளத்தில் பெரும்பாலனோர் பார்த்திருந்தனர். இதை தொடர்ந்து நிறை மாத கர்ப்பிணியான பரினா நீருக்கடியில் எடுத்திருந்த போட்டோ ஷுட் அனைவரின் கவனத்தையம் ஈர்த்திருந்தது. வயிற்றில் குழந்தையுடன் தொடர்ந்து பரினா பாரதி கண்ணம்மாவில் நடித்து வந்தார். பிரசவ காலம் நெருங்கியதை ஒட்டி வெண்பா சிறையிலேயே இருப்பது போகின்ற கட்சியை படமாக்கி விட்டு பரினா சிரியலிருந்து சிறுது காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தார். ஒரே சமயத்தில் (கண்ணம்மா) ரோஷினி, (வெண்பா) பரினா இருவரும் நாடகத்தை விட்டு விலகியது ரசிகர்ளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.
இந்நிலையில் இன்று பரினாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள பரினா ; மகன் என குறிப்பிட்டுள்ளார். பரினாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.