#Liger இந்திய சினிமாவிற்குள் நுழைந்த மைக் டைசன் ; நேருக்கு நேர் சந்தித்த மைக் டைசன் - விஜய்!!

Kanmani P   | Asianet News
Published : Nov 16, 2021, 11:53 AM ISTUpdated : Nov 16, 2021, 11:59 AM IST
#Liger இந்திய சினிமாவிற்குள் நுழைந்த மைக் டைசன் ; நேருக்கு நேர் சந்தித்த மைக் டைசன் - விஜய்!!

சுருக்கம்

விஜய் தேவரகொண்டாவின் "Liger" படத்தில் பிரபல குத்திட்டு சண்டை வீரர் மைக் டைசன் நடித்து வருகிறார்.

கிராந்தி மாதவ் இயக்கத்தில்  கடந்த ஆண்டு வெளியான  விஜய் தேவரகொண்டாவின் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘Liger’ படத்தில் நடித்து வருகிறார். பூரி ஜெகன்நாத் இடியட், அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி, சிவமணி, தெலுங்கில் வெளியான போக்கிரி உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்.

இவர் தற்போது விஜய் தேவரைகொண்டவை கொண்டு இயக்கி வரும் லிகர் படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன் நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் இந்த படம் உருவாக்கி வருகிறது.

Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்துள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மைக்  நடித்து வருவதாக தகவல் சொல்கிறது. மேலும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே மற்றும் முக்கிய வேடத்தில்  ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.

தற்போது அமெரிக்காவில் உள்ள இந்த படக்குழு லெஜண்ட் மைக் டைசன் மற்றும் லிகர் விஜய் தேவரகொண்டா சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை படமாக்க குழு  உள்ளதுகி வருகிறது. பிரமாண்ட ஷெட்டில் துவங்கியுள்ள இந்த படப்பிடிப்பு தொடர்பான போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  மைக் டைசனின் முகத்திற்குள் தனது பாதி முகத்தை மறைத்தபடி விஜய் தேவரைக்கொண்ட புன்னகைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்டுள்ள தேவரகொண்டா ; ஒவ்வொரு நொடியிலும்  சிறப்பு வாய்ந்த ஞாபகங்கள் உருவாக்குவதாக கூறியுள்ளார். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அஜித்தோடு மாப்பிள்ளை சார் சபரீசன்; சூடு வச்ச மாதிரி ஒரு கூட்டமே கதறுமே.? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நக்கல்
வா வாத்தியார் படத்தின் புது ரிலீஸ் தேதி இதுதான்... இம்முறையாவது ரிலீஸ் ஆகுமா...?