சீரியல் நடிகர் பிர்லா போஸ்சுக்கு நடந்த சோகம்! வீதிக்கு வரும் நிலையில் குடும்பம்!

Published : Feb 13, 2019, 06:38 PM IST
சீரியல் நடிகர் பிர்லா போஸ்சுக்கு நடந்த சோகம்! வீதிக்கு வரும் நிலையில் குடும்பம்!

சுருக்கம்

கோலங்கள், திருமதி செல்வம், பந்தம், உள்ளிட்ட தொலைகாட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் பிர்லா போஸ். மேலும் 'தனி ஒருவன்', 'துப்பறிவாளன்' போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  

கோலங்கள், திருமதி செல்வம், பந்தம், உள்ளிட்ட தொலைகாட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் பிர்லா போஸ். மேலும் 'தனி ஒருவன்', 'துப்பறிவாளன்' போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற, சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் நடிகை நிரோஷாவின் அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சங்கத்தின் செயல்குழு உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவருடைய வீடு பறிபோகும் நிலைமையில் உள்ளது. இதனால் இன்று கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த அவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, நான் மதுரவாயல், பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்த வீட்டை பாலாஜி என்பவரிடம் குத்தகைக்கு வங்கியிருந்தேன். ஒருநாள், வங்கியில் இருந்து வந்த அதிகாரிகள், வீடு ஜப்தியில் உள்ளது என கூறி, உடனே காலி செய்ய வேண்டும் என்று கூறினர். எனக்கு எதுவும் புரியவில்லை.

எனவே வீடு சம்பந்தமாக சிலர் தன்னை ஏமாற்றி உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு முன்பு கூட இதுகுறித்து புகார் கொடுத்துள்ளதாகவும் ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ilayaraja Music: மூச்சடக்கி ஒரு மோகனம்.! 'மண்ணில் இந்த காதலன்றி' - பாடலுக்குப் பின்னால் ஒரு காவியம்!
Keerthy Suresh : உடம்போடு ஒட்டிய பூப்போட்ட ஆடையில் கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான கிளிக்ஸ்!!