பின்னழகு என்ன முன்னழகையும் காட்டுகிறேன்! ட்விட்டரில் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி தாராளம்!

 
Published : Jul 12, 2018, 11:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
பின்னழகு என்ன முன்னழகையும் காட்டுகிறேன்! ட்விட்டரில் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரி தாராளம்!

சுருக்கம்

Senior actress Kasthuri seductive moves

பிரபல நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள், சமூகவலைதளங்களில் தாறுமாறாக வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவின் அத்தனை நடப்புகளையும் மிச்சம் வைக்காமல் கலாய்த்து, ரஜினிகாந்த் முதல் நேற்று வந்த நடிகர்கள் வரை கிண்டலடித்து வெளிவந்த ’தமிழ்ப்படம்’ ரசிகர்களின் பிரமாண்ட வரவேற்பை பெற்றதுடன், வசூலில் சக்கைப்போடு போட்டது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த இந்தப் படத்தில் பிரபல நடிகை கஸ்தூரியும் தன் பங்குக்கு ”குத்துவிளக்கு” பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ரசிகர்களை குதூகலப் படுத்தினார்.

இந்த நிலையில், தமிழ்ப்படம் 2.0 திரைப்படம் சிவா-சி.எஸ்.அமுதன் கூட்டணியிலேயே வெளிவருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். தியானம் செய்தது போல, சிவாவும் தியானம் செய்யும் ஃபர்ட்ஸ்லுக் போஸ்டரை வெளியிட்ட தமிழ்ப்படம் 2.0 திரைப்படக்குழு, அடுத்தடுத்து உலகளாவிய அளவில் நடைபெறும் விசயங்களையும் உருவகப்படுத்தி, தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். சிவா – சி.எஸ்.அமுதன் கூட்டணியின் தொடர் முயற்சியால், தமிழ்ப்படம் 2.0 படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருந்தாலும், நடிகை கஸ்தூரியும் தன்பங்குக்கு வாசகர்களை ஈர்க்க ட்விட்டரில் வலம் வரத் தொடங்கியுள்ளார். பொதுவாகவே ட்விட்டர் பல புரட்சிகரமான கருத்துகளை தொடர்ந்து கூறி, ஆக்டிவாகவே இருந்து வரும் கஸ்தூரி, தற்போதும் ஒரு சூடான புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்

.

தனது முதுகை காட்டியபடி, ஒரு டேபிளில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இது யார் என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்றும் கஸ்தூரி பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த பலர், அது கஸ்தூரிதான் என்று கண்டுபிடித்துவிட்டாலும், சிலர் மட்டும் இது யார் என்று எதிர் கேள்வி எழுப்பி, கஸ்தூரியை கடுப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இருந்தாலும் அவரது கேள்விகளை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டுள்ள கஸ்தூரி, ஒய் நாட் என்று தமிழ்ப்படம் 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையே பதிலாக பதிவிட்டு, கேள்வி கேட்டவர்களை மேலும் குழப்பியுள்ளார். தொடர்ந்து அது ஏன் முன்னழகை மட்டும் காட்டுகிறீர்கள், பின்னழகையும் காட்டுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்க அதற்கும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி.

தமிழ்ப்படத்தைப் போலவே தமிழ்ப்படம் 2.0 படத்திலும் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளேன் என்பதை சொல்லும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி வீடியோ, ரசிகர்களை மேலும் சூடாக்கியுள்ளது.  அந்த பாடலில் கஸ்தூரியின் அசைவுகள் செம செக்சியாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் தனது குழந்தையுடன் பிகினி உடையில் இருப்பது போன்ற ஒரு போட்டோவையும் கஸ்தூரி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆஸ்கர் ரேஸில் அடுத்த லெவலுக்கு சென்ற ஒரே ஒரு இந்திய படம் - விருதை தட்டிதூக்குமா?
சிங்கப்பெண்ணே சீரியல் ஹீரோவுக்கு கல்யாணம்... சீரியல் ஹீரோயின் உடன் விரைவில் டும்டும்டும்