ரஜினியுடன் செல்ஃபி... உற்சாகத்தில் வரலட்சுமி சரத்குமார்!

 
Published : Jan 09, 2018, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
ரஜினியுடன் செல்ஃபி... உற்சாகத்தில் வரலட்சுமி சரத்குமார்!

சுருக்கம்

selfie with rajini varalaxmi sarathkumar tweeted

இரு தினங்களுக்கு முன்னர் மலேசியாவில் நட்சத்திரக் கலை விழா நடைபெற்றது. நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் ஒரு கலை விழா நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து திரையுலகினர் பலரும் மலேசியா சென்றிருந்தனர். 

இவர்களில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி மலேசியாவில் எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

 

மலேசிய ரசிகர்கள் தங்களை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்ததாகக் கூறியுள்ள வரலட்சுமி சரத்குமார்,  தன்னுடன் இருந்த நடிகர் பட்டாளத்தை செல்ஃபியில் க்ளிக்கி டிவிட்டரில் போட்டுள்ளார். அதில், சிவகார்த்திகேயன், ஆர்யா, விக்ரம் பிரபு, ஜிவி பிரகாஷ், ஹரிஷ் கல்யாண், சாயிஷா, சூரி, சந்தனு, ஷிவா என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே உடன் மகிழ்ச்சி பொங்க காட்சி தருகிறார்கள். 

இன்னொரு டிவிட்டர் பதிவில், தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் எடுத்துக் கொண்ட செஃபியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. தான் சேமித்து வைத்ததில் மிகச் சிறந்த படம் இது என்று ‘தலைவா’ என்று குறிப்பிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி