
2007ல் பரத்தின் ‘கூடல் நகர்’படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. தனது யதார்த்தமான திரைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்த சீனு ராமசாமி, இந்த படத்தை தொடர்ந்து இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தது.
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘கண்ணே கலைமானே படத்தில் உதயநிதியை கிராமத்து இளைஞராக காட்டியிருந்தார். மேலும், லிங்குசாமி தயாரிப்பில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள ‘மாமனிதன்’படங்கள் நீண்ட காலத் தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படங்கள் எப்போது ரிலீஸாகும் என்று சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும்
அவசரம் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் யாரால், எதற்கு என்பது குறித்த எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. இயக்குனர் சீனு ராமசாமியின் இந்த பதிவு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.