என் உயிருக்கு ஆபத்து... அய்யா காப்ப்பாத்துங்க அவரசரம்... உயிர்பயத்தில் கதறும் இயக்குநர் சீனு ராமசாமி..!

Published : Oct 28, 2020, 10:52 AM IST
என் உயிருக்கு ஆபத்து... அய்யா காப்ப்பாத்துங்க அவரசரம்... உயிர்பயத்தில் கதறும் இயக்குநர் சீனு ராமசாமி..!

சுருக்கம்

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக உதவ வேண்டும் என பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக உதவ வேண்டும் என பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தென்மேற்குப் பருவ காற்று, தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவர் தன்னுடைய  ட்விட்டர் பதிவில், "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்" என பதிவிட்டுள்ளார்.

 

அண்மையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். தற்போது இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கும், இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? அல்லது இவர் இயக்கும் படத்திற்கான ஏதேனும் புரமோஷனா? என நெட்டிசன்கள் புரியாமல் தவித்து வருகின்றனர்.  பலரும் என்னாச்சு? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், என்ன காரணத்திற்காக யாரால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதை சீனுராமசாமி கூறவில்லை. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!