
தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பத்துப்பைசா பெறாத விசயங்களுக்கு அஜீத் ,விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்’என்று போகிற போக்கில் அவர்களை வெளுத்து வாங்கியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.
நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வரும் அக் 21ல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிகிறது. இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். சீமான் பேசுகையில், ’என்னை எதிர்க்கிறவன் எல்லாம் என் எதிரி அல்ல, நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் என் எதிரி. நான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி. அந்த பன்றிகளின் மீது இருக்கும் உன்னிகளை வேட்டையாட வந்தவன் அல்ல.
இப்போது எல்லாம் வடமாநிலத்தவர்கள் தான் தமிழகத்தின் பெரும்பாலான வேலைகளில் பணி அமர்த்தப்படுகின்றனர். அதற்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு என் தலடா, என் தளபதிடா என அஜீத்,விஜய் ரசிகர்களாகிய நீங்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியே தலயா தளபதியா என பத்துப்பைசா பெறாத விசயங்களுக்கெல்லாம் சண்டை போட்டே மண்டையை போடப்போகிறீர்கள்.நான் மெயின் ரவுடிகளிடம் மோதிக் கொண்டிருக்கிறேன். அதனால் அல்லக்கைகள் குறுக்கே வரக்கூடாது ‘என்றார் சீமான்.
நேற்று இரவு முதலே தல 60 பட பூஜையை ட்ரெண்டிங் செய்ய அஜீத் ரசிகர்களும், ‘பிகில்’படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் பிறந்த நாளை ட்ரெண்டிங் செய்ய விஜய் ரசிகர்களும் அடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு அடித்துக்கொள்ள அடுத்த நல்ல டாபிக் கிடைத்திருக்கிறது. அதாகப்பட்டது ‘சீமான் ஓவரா கேவலப்படுத்துனது தல ரசிகர்களையா அல்லது தளபதி ரசிகர்களையா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.