ஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டும் 40 கோடி...’இந்தியன் 2’வில் இயக்குநர் ஷங்கர் அட்ராசிட்டி...

Published : Oct 18, 2019, 03:41 PM IST
ஒரு சண்டைக் காட்சியின் பட்ஜெட் மட்டும் 40 கோடி...’இந்தியன் 2’வில்  இயக்குநர் ஷங்கர் அட்ராசிட்டி...

சுருக்கம்

இங்கு எடுக்கப்படவிருக்கும் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்றுக்காக மட்டுமே தயாரிப்பு நிறுவனத்திடம் 40 கோடி பட்ஜெட் ஒதுக்கச் சொல்லியுள்ளதாகவும், அதை தயாரிப்பு நிறுவனமும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது.இந்த சண்டைக் காட்சிக்கு மட்டும் 2,000 துணைக் கலைஞர்கள் ஈடுபடவுள்ளார்களாம். இக்காட்சியை தேசிய விருதுபெற்ற சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கவுள்ளார்

கால்வாசி படமே முடிந்துள்ள ‘இந்தியன்2’படத்தின் அடுத்த ஷெட்யூல் போபாலில் நடக்கவுள்ள நிலையில் அங்கு எடுக்கப்படவிருக்கும் ஒரு சண்டைக்காட்சிக்கு மட்டும் இயக்குநர் ஷங்கர் 40 கோடி பட்ஜெட் கேட்டுள்ளதாக பகீர் தகவல்கள் வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முழுமையாக விடைபெற்று முழுவீச்சில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ‘இந்தியன் 2’படத்துக்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல். இதுவரை சுமார் 25 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பு விஷவாயுக் கசிவுக்கு உள்ளான போபாலில் நடைபெறவுள்ளது. இங்கு எடுக்கப்படவிருக்கும் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்றுக்காக மட்டுமே தயாரிப்பு நிறுவனத்திடம் 40 கோடி பட்ஜெட் ஒதுக்கச் சொல்லியுள்ளதாகவும், அதை தயாரிப்பு நிறுவனமும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது.இந்த சண்டைக் காட்சிக்கு மட்டும் 2,000 துணைக் கலைஞர்கள் ஈடுபடவுள்ளார்களாம். இக்காட்சியை தேசிய விருதுபெற்ற சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கவுள்ளார். 

போபாலைத் தொடர்ந்து, அடுத்து தைவான்,ஐரோப்பா என பறக்கவுள்ளது இந்தியன் 2 படக்குழு. இந்நிலையில் இயக்குநர் ஷங்கருக்கு முன்னால் இரண்டு சவால்கள் இருக்கின்றன. முதலாவது இப்படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கு மேல் போனால் மீதிப்பணம் ஷங்கரின் சம்பளத்திலிருந்தே செலவழிக்கப்படும். அடுத்தது கமல் தன் சம்பந்தப்பட்ட காட்சிகளை டிசம்பர் இறுதிக்குள் முடித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!