அடப்பாவமே.. சத்யராஜுக்கா இந்த நிலைமை..?! படத்தில் நடிப்பதை குறைப்பது ஏன்..?

Kanmani P   | Asianet News
Published : Jan 27, 2022, 03:59 PM ISTUpdated : Jan 27, 2022, 04:00 PM IST
அடப்பாவமே.. சத்யராஜுக்கா இந்த நிலைமை..?! படத்தில் நடிப்பதை குறைப்பது ஏன்..?

சுருக்கம்

சத்யராஜ் மனைவி மகேஸ்வரி சுப்பையா நீண்ட நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும்.. அவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்வதற்காக சத்யராஜ் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரையுலகில் இருந்த வரும் வாய்ப்புகளை தட்டி கழித்து வருவதாக தகவல் பரவி வருகிறது..

வில்லனாக நடிக்க ஆரம்பித்து தனது எதார்த்த நக்கல் பேச்சால் மக்களை கவர்ந்து ஹீரோவானவர்  சத்யராஜ். 90களில் இவர் நடிப்பில் வெளி வந்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதிலும் அம்மாவாசை கதாபாத்திரம் இன்றும் மனதில் நிற்க கூடியது. பாகுபலிக்கு பிறகு தெலுங்கு நடிகராவே மாறிவிட்டார் சத்யராஜ்..இதை தெலுங்கு பத்திரிக்கை ஒன்று குறிப்பிட்டிருந்தது.. அதோடு பெரும்பாலான கன்னட, தெலுங்கு மொழிகளில் சத்யராஜை காண முடியும்.. மேலும்  பாகுபலியை போலவே பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் படத்திலும் சத்யராஜுக்கு வலிமையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் என பேசப்படுகிறது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் சத்யராஜ்.  விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் தீரன் இயக்கியுள்ளார். 

தயாரிப்பாளர் சலீம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் தீரன் அவர்களின் இயக்கத்தில், சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட், மயில்சாமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சத்யராஜ்  சத்யராஜுக்கு கொரோனா உறுதியானதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 7-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்யராஜ் தற்போது கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டும் 11-ம் தேதி வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி மகேஸ்வரி சுப்பையா நீண்ட நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும்.. அவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்வதற்காக சத்யராஜ் தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரையுலகில் இருந்த வரும் வாய்ப்புகளை தட்டி கழித்து வருவதாக தகவல் பரவி வருகிறது..ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு மொழியில் நடிக்க இருக்கும் படத்தில் சத்யராஜ் கமிட் ஆகியுள்ளதாக தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கி கல்லாகட்டிய டாப் 5 தமிழ் ஹீரோஸ்... ரஜினியை முந்திய அஜித்..!
மாஸ் ஸ்கெட்ச்! இனி தோல்வியே இல்லை! சூர்யாவுக்கு ஹாட்ரிக் ஹிட்டு உறுதி: அதிரடித் திட்டம் என்ன?