
1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் சத்யராஜ். 67 வயதாகும் சதயராஜ் இன்றளவும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டும் பிரபலமாக இருந்த சத்யராஜை இந்திய அளவில் பிரபலமாக்கிய திரைப்படம் பாகுபலி. ராஜமவுலி இயக்கிய இப்படத்தின் கட்டப்பா என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம்.
இப்படத்துக்கு பின் தற்போது பிரபாஸுடன் இணைந்து அவர் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற மார்ச் 11-ந் தேதி இப்படம் திரைகாண உள்ளது.
ரிலீஸ் நெருங்கி வருவதால், ராதே ஷ்யாம் படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னையில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சத்யராஜ் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது: “நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன், அப்படி இருக்கையில் எப்படி ராதே ஷ்யாம் படத்தில் கைரேகை நிபுணராக நடித்தீர்கள் என எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். அப்படி பார்த்தால் நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 நடிகைகளை கல்யாணம் பண்ணிருக்கேன்... அப்போ அதெல்லாம் என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக பார்க்க வேண்டும்.
ஆழமான காதல் கதையை கொண்டு இப்படம் தயாராகி இருக்கிறது. இது பான் இந்தியா படமில்லை, பான் இண்டர்நேஷனல் படம். இப்படம் உங்கள் அனைவருக்கு மிகவும் பிடித்த வண்ணம் இருக்கும்” என நடிகர் சத்யராஜ் கூறினார்.
இதையும் படியுங்கள்... Vaadivasal movie Update : வாரே வா... சூர்யாவின் வாடிவாசல் படத்தின் வேறலெவல் அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.