"தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" - நடிகர் சத்யராஜ் உறுதி

First Published Apr 21, 2017, 2:06 PM IST
Highlights
sathyaraj says that he will give voice for TN people


நடிகர் சத்யராஜ் கன்னட மக்களுக்கு எதிராக பேசியதாக கூறி அவர்  நடித்த பாகுபலி-2 படத்திற்கு கர்நாடாகாவில் எழுந்த பிரச்னையை தொடர்ந்து, அப்படத்தில் கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ், மன்னிப்பு கேட்டுள்ளார். 
 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கடந்த 9 வருடங்களுக்கு முன் காவிரி நதிநீர் பிரச்சனையில்  கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள்.

இதுதொடர்பாக தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த போராட்டத்தின் போது நான் உட்பட பல திரையுலகினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். அதில் நான் பேசிய கருத்து கன்னட மக்களை புண்படுத்துவதாக அறிகிறேன். அதற்காக 9 வருடங்களுக்கு பிறகு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்பதால்,என் மீது அக்கறை கொண்ட தமிழ் ஆர்வலர்களும், தமிழ் மக்களும், நலம்விரும்பிகளும் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தில் ஒரு சிறிய தொழிலாளி தான் நான். என் ஒருவனுக்காக பல ஆயிரம் பேரின் உழைப்பு மற்றும் பணம் விரயமாக விரும்பவில்லை. அதுமட்டுமல்ல பாகுபலி-2வை கர்நாடகாவில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டமடைய வேண்டாம். என்பதே என் எண்ணம் என குறிப்பிட்டுள்ளார்

ஆனாலும் இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்னையாக இருந்தாலும், விவசாயிகளின் பிரச்னையாக இருந்தாலும் சரி தமிழர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கு எனது குரல் ஓங்கி ஒலித்து கொண்டு தான் இருக்கும் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்வதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

இப்படி நான் செய்வதால், என்னை வைத்து படம் தயாரித்தால் பிரச்னை வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள், இந்த சின்ன நடிகனான சத்யாரஜை யாரும் தங்களது படங்களில் நடிக்க வைக்க வேண்டாம்.

என்னை யாரும் அணுக வேண்டாம், என்னால் யாரும் நஷ்டப்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் எனக்கு மகிழ்ச்சி என சத்யராஜ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

click me!