அரைநிர்வாண புகைப்படம் காட்டி அநாகரீகம் செய்த இயக்குனர்... சாட்டை அடி பதிலால் தெறித்து ஓடவைத்த நடிகை...

 
Published : Apr 21, 2017, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
அரைநிர்வாண புகைப்படம் காட்டி அநாகரீகம் செய்த இயக்குனர்... சாட்டை அடி பதிலால் தெறித்து ஓடவைத்த நடிகை...

சுருக்கம்

actress surabi lakshmi talk about his movie director

மலையாள  படத்தில் மிகவும் பிரபலமான நடிகை 'சுரபி லட்சுமி' தன்னிடம் ஆபாச வார்த்தைகள் கூறியும் , ஒரு நடிகையின் அரை நிர்வாண புகைப்படத்தையும்  காண்பித்த இயக்குனருக்கு  சாட்டையால் அடிப்பது போல பதில் கூறியுள்ள சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மலையாள திரையுலகை சேர்ந்த, பாவனா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க பட்ட பின், தொடர்ந்து தங்களது வாழ்வில் நேர்ந்த கொடூர சம்பவங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் தென்னிந்திய நடிகைகள்.

சமீபத்தில் கூட மலையாள நடிகை பார்வதி, தன்னை படுக்கைக்கு அழைத்ததால் தான், இது நாள் வரை தனக்கு அதிக படங்கள் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது சுரபி லட்சுமியும்  இதே போன்ற புகாரை முன்வைத்துள்ளார், மேலும் இது குறித்து அவர் கூறுகையில், தன்னை வைத்து படம் இயக்குவதாக கூறி இருந்த இயக்குனர் தன்னிடம் கதை சொல்லி முடித்ததும்... பிரபல நடிகையின் அரைநிர்வாண புகைப்படத்தை காட்டி நீங்கள் எப்போது இது போல் நடிக்க போகிறீர்கள் என கேட்டார்.

அவரது நோக்கத்தை புரிந்து கொண்ட நான், சார் இந்த ஆடை என்னை விட தற்போது 18 வயதை தொட்டிருக்கும் உங்களது மகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என கூறினேன்.

என்னிடம் இருந்த இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத, அந்த இயக்குனர் மிகவும் ஷாக் ஆகி தன்னிடம் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு விலகினார்.

மேலும் தன்னிடம் இது வரை ஒரு இயக்குனர் கூட இது போன்ற அநாகரீகமாக நடந்து கொண்டது இல்லை என்றும். இவர் தான் தன்னிடம் முதல் முதலில் தவறாக அணுகிய மோசமான ஆள்   எனவும் கண்கலங்கியவாறு கூறியுள்ளார் நடிகை சுரபி லட்சுமி.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!