
பெரியார்
சத்யராஜ் பெரியாரின் தீவிர ரசிகர்.எங்கு சென்றாலும் பெரியாரின் கொள்கை பற்றி பேசுவார்.எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக சொல்லி விடும் குணம் கொண்டவர்.
கருத்து
சமீபத்தில் அரசியல் கட்சி தலைவர்களிலிருந்து நடிகர்கள் வரை காவிரி நதிநீர் பங்கிடு தொடர்பான இறுதி தீர்ப்புக்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இறுதி தீர்ப்பு
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சத்யராஜ் கலந்து கொண்டு காவிரி இறுதிதீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில்..
திருப்தியில்லை
காவிரி பிரச்சனைக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நமக்கு திருப்தியில்லை.
இதை 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்று சொல்கின்றனர்.தயவு செய்து அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏதும் முயற்சி செய்யுங்கள்.
காட்டம்
மேலும் பிரபல நடிகர்களாக இருந்தாலே அவர்களுக்கு எல்லாமே தெரியும் என்பதில்லை என்று சத்யராஜ் காட்டமாக பேசியுள்ளார்
ரஜினி ,கமல்
ரஜினி அரசியலுக்கு வந்து விட்டார்.கமலும் வருகிற 21 ம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறார்.இந்நிலையில் சத்யராஜ் இவர்கள் இருவரையும் நேரடியாக தாக்கி பேசியுள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.