
பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள "எம்.ஜி.ஆர்.மகன்" விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், நந்திதா ஸ்வேதா, சமுத்தரகனி, மிருணாளினி ரவி உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு சசிக்குமார் நடித்த 'எம்.ஜி.ஆர். மகன்', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'ராஜவம்சம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இருந்து சசிக்குமார் நடித்த படங்கள் அனைத்தும் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது.
இதனால் ஏமாற்றமடைந்த சசிக்குமார் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக''எம்.ஜி.ஆர். மகன்'' படக்குழுவினர் ரசிகர்களுக்கு சூப்பரான பொங்கல் பரிசளித்துள்ளனர். தனது காந்த குரலால் ரசிகர்களை ஈர்த்த பிரபல கிராமத்து பாடகரான அந்தோணி தாசன், இந்த படம் மூலம் முதல் முறையாக பாடகராக அறிமுகமாகியுள்ளார். அவரது குரலில் உருவாகியுள்ள ''கெளப்பு, கெளப்பு'' பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பாடலில் சில வரிகளை சசிக்குமாரும் பாடியுள்ளார். அந்த காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளதால் சசிக்குமார் ரசிகர்கள் செம்ம ஹாப்பியில் உள்ளனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமுத்திரகனி, சசிக்குமார் இணைந்து நடித்துள்ள படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சீமராஜா படம் மூலம் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்த பொன்ராம் ''எம்.ஜி.ஆர்.மகன்'' மூலம் மீண்டும் வெற்றியை ருசிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.