ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' படம் எப்படி இருக்கு? ஷாட் விமர்சனம்..!

Published : Jul 22, 2021, 07:54 AM IST
ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' படம் எப்படி இருக்கு? ஷாட் விமர்சனம்..!

சுருக்கம்

இயக்குனர் பா.ரஞ்சித் எழுதி, இயக்குள்ள பீரியாடிக் ஸ்போர்ட்ஸ், திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தில் ஆர்யா மற்றும் துஷாரா விஜயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே 9 ஸ்டுடியோஸ் தயாரிக்க , சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜி.முரளியின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

இயக்குனர் பா.ரஞ்சித் எழுதி, இயக்குள்ள பீரியாடிக் ஸ்போர்ட்ஸ், திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தில் ஆர்யா மற்றும் துஷாரா விஜயன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே 9 ஸ்டுடியோஸ் தயாரிக்க , சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜி.முரளியின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் கதை:

இந்த படத்தின் கதையை, டார்லரை பார்த்தே நாம் யூகித்திருக்கலாம். காரணம் முழு கதையும் அதிலேயே அடங்கி விட்டது. 'சார்பட்டா பரம்பரைக்கும்', 'இடியாப்ப பரம்பரைக்கும்' நடக்கும் பாக்சிங் போட்டியில்.... பசுபதி குருவாக உள்ள 'சார்பட்டா பரம்பரை' தொடர்ந்து தோல்விகளை சந்திக்கிறது. இறுதியாக ஒரே ஒரு பாக்சிங் போட்டிக்கு அனுமதி கேட்கும் பசுபதி, இதில் தோற்று விட்டால்... பாக்சிங்கை விட்டே செல்வதாக கூறுகிறார். 

ஆர்யா பாக்சிங் விளையாட பல எதிர்ப்புகள் இருக்கும் நிலையில், எப்படி அவர் உள்ளே வருகிறார். ஆர்யா பாக்சிங் விளையாடாமல் இருக்க என்ன காரணம் என்பதை காதல், அழுகை, பாசம் என அனைத்தும் கலந்த கதம்பமாக வெளிப்படுத்தியுள்ளது 'சார்பட்டா பரம்பரை'.

ஆர்யாவின் நடிப்பு:

வித்தியாசமான படத்திற்காக காத்திருந்த ஆர்யாவின் நடிப்பு பசிக்கு தீனி போட்டுள்ளார் பா.ரஞ்சித். பாக்சிங் விளையாட்டுக்காக உடலை வருத்தி, இரும்பாக்கி நடித்துள்ளார். அவர் போடும் பாக்சிங் காட்சிகளும் தத்ரூபமாகவே உள்ளது. அதே போல் மற்றொரு பாதியில்... குடித்து விட்டு ரவுடீசம் செய்வது, பார்க்கவே உடல் வலுவிழந்து, தொப்பை போட்டு காட்சியளிக்கும் கபிலனாகவும் ஆர்யா நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

ஆர்யாவை தவிர இந்த படத்தில் நடித்துள்ள ரங்கன் வாத்தியார், வேம்புலி, ராமன், வெற்றி, டான்சிங் ரோஸ் என அனைவருமே அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்துள்ளனர். 

படம் குறித்த சிறிய அலசல்:

வடசென்னை பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த பாக்சிங் விளையாட்டு, எப்படி ஒருவனை நல்வழி படுத்துகிறதோ... அதே போல் பகைமையை உண்டாக்கி, அடி தடி பிரச்சனைகளுக்கும் எப்படி வழி வகை செய்கிறது என்பதை புரியும்படி எடுத்து கூறியுள்ளார் பா.ரஞ்சித். 

பீரியாடிக் படம் என்றால், கலை துறையினருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. 80 களில் உள்ள சென்னையை... செட் என்று தெரியாதது போல் தத்துரூபமாக வடிவமைத்துள்ளார் கலை இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் ஜி.முரளியின் ஒவ்வொரு ஷாட்டும் மனதில் பதிகிறது. பாக்சிங் காட்சிகள் முதல், மக்கள் கூட்டங்களை ஒட்டுமொத்தமாக காட்டி பிரமிக்க வைத்துள்ளார். 

சந்தோஷ் நாராயணன் மியூசிக் வழக்கம் போல் அலட்டிமேட்... ஒட்டு மொத்தத்தில் இதுவரை எடுத்திடாத புதிய ஜர்னரில் படம் இயக்கி, வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். ஒருவேளை இந்த படம் ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்கில் வெளியாகி இருந்தால், சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?