'சார்பட்டா பரம்பரை' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!

By manimegalai aFirst Published Jul 8, 2021, 3:53 PM IST
Highlights

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்திருக்கும் 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலை இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆர்யாவின் 30வது படமாக உருவாகியுள்ள 'சார்பட்டா' படத்திற்காக மிக கடுமையான உடல் பயிற்சிகள் செய்து, நடித்துள்ளார் ஆர்யா. இவர் மட்டும் இன்றி, இவருடன் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் பல்வேறு கடுமையான உடல் பயிற்சிகள் மற்றும் பாக்ஸிங் கற்று கொண்டுதான் நடித்துள்ளனர். இந்த படத்தை 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கே 9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா, இப்படத்தில்...  வடசென்னை வாலிபராகவும், பாக்ஸராகவும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, விரைவில் டிரைலர் வெளியாக போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக, 'சார்பட்டா' படத்தின் மேக்கிங் வீடியோவை கடந்த மார்ச் மாதம் வெளியானது.இந்த வீடியோவில் ஒவ்வொருவருடைய கதாப்பாத்திரம் குறித்தும், படக்குழு விளக்கியுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும், எவ்வளவு கடுமையாக படத்திற்காக உழைத்துள்ளனர் என்பதும் தெரிகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, படங்கள் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாகிவரும் நிலையில், 'சார்பட்டா பரம்பரை' படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக, அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. திரையரங்கில் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது படக்குழுவின் முடிவு என்றே கூறலாம்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் ஜூலை மாதம் 22 ஆம் தேதி, ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்த படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார். 


 

For an individual as well as for a society,there is a gulf between merely living and living worthily-Babasaheb
Victory of an Individual is a victory to the entire society.
Watch July 22, thanks to all pic.twitter.com/5UwUW0z0iU

— pa.ranjith (@beemji)

click me!