'பாகுபலி' பட பாணியில் ரிலீஸ் செய்யப்படும் விக்ரமின் துருவ நட்சத்திரம்..!

By manimegalai aFirst Published Jul 8, 2021, 2:42 PM IST
Highlights

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, துருவ நட்சத்திரம் திரைப்படம்... இரண்டு பாகங்களாக வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, துருவ நட்சத்திரம் திரைப்படம்... இரண்டு பாகங்களாக வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 'துருவ நட்சத்திரம்' படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் செய்வதால் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்படும் என தேதி முதற்கொண்டு வெளியான நிலையில், கொரோனா பிரச்சனை தலை தூங்கியதால் ரிலீஸ் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'சியான்' விக்ரம் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் 'துருவ நட்சத்திரம்' படம் குறித்த அப்டேட்டும் வேற லெவல் அப்டேட் இப்போது வெளியாகியுள்ளது.

முதல்முறையாக கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப்படத்தில், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அவர்களுடன் சிம்ரன், ராதிகா, டிடி மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 'துருவ' நட்சத்திரம் படத்தின் பெரும்பாலான காட்சிகள், துருக்கி, ஜார்ஜியா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், விக்ரம் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 

ஏற்கெனவே, படத்தின் டீசர்கள், டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. விறுவிறுப்பாக உருவாகி வந்த இந்தப்படம், பணச்சிக்கல் காரணமாக பாதியில் நின்றது. பின்னர் ஒருவழியாக படத்தின் ஷுட்டிங்கை கவுதம் மேனன் முடித்தார். இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், துருவ நட்சத்திரம் என்ற படம் தயாராவதையே ரசிகர்கள் மறந்து விட்டனர் என்றே கூறலாம். 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்து மட்டும் அவ்வப்போது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் சுமார் 4 மணிநேரம் 30 நிமிடங்கள் ஓடும் படமாக உருவாகியுள்ளதால், இதனை பாகுபலி, மற்றும் கே.ஜி.எஃப் போன்று இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

click me!