திருட்டு சர்கார் முழுமையா உதவமுடியாமைக்கு வருந்துகிறோமாம்... அப்புறம் என்ன.... துக்கு சங்கம்? கொந்தளிக்கும் இயக்குநர்கள்

Published : Oct 26, 2018, 12:18 PM IST
திருட்டு சர்கார் முழுமையா உதவமுடியாமைக்கு வருந்துகிறோமாம்... அப்புறம் என்ன.... துக்கு சங்கம்? கொந்தளிக்கும் இயக்குநர்கள்

சுருக்கம்

சர்கார் கதைத்திருட்டு தொடர்பாக வெளியாகியுள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் லெட்டர் பேடு மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

’சர்கார்’ கதைத்திருட்டு தொடர்பாக வெளியாகியுள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் லெட்டர் பேடு மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பொதுச்செயலாளர் மனோஜ்குமார், தலைவர் கே.பாக்கியராஜ் ஆகியோரின் கையெழுத்துகளுடன் வெளியான அக்கடிதத்தின் கடைசி பக்கம் மட்டும்  வலைதளங்களில் படுவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. 

அக்கடித்தத்தின் சாராம்சம் இதுதான்...ஒரு சிலரின் கருத்து வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில் வருண் ராஜேந்திரனின் ‘செங்கோல்’ கதையும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ கதையும் ஒன்றே என்று சங்கம் முடிவு செய்கிறது.

உங்கள் பக்க நியாயத்துக்காக நீங்கள் [வருண் ராஜேந்திரன்] அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தடைசெய்ய மாட்டோம். முழுமையாக தங்களுக்கு உதவமுடியாமைக்கு வருந்துகிறோம்’ என்று முடிகிறது அந்தக்கடிதம். 

இக்கடிதத்தை படிக்கநேரும் அனைவரும் நியாயமான உதவி இயக்குநர்களுக்கு உதவ முடியாமைக்கு வருந்துகிறோம்னு சொல்றதுக்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அப்புறம் என்ன டேஷ்க்கு சங்கம்?? என்று கொதித்துப்போய் கமெண்ட் போடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்