சர்கார் படப்பிடிப்பில் பரபரப்பு! ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய விஜய் – கீர்த்தி சுரேஷ்!

 
Published : Jul 30, 2018, 11:11 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
சர்கார் படப்பிடிப்பில் பரபரப்பு! ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய விஜய் – கீர்த்தி சுரேஷ்!

சுருக்கம்

Sarkar shooting Vijay Keerthi Suresh fans crowd

சென்னையில் சர்க்கார் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய், அங்கு வந்த ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிப் போன காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து துப்பாக்கி, கத்தி போன்ற மெகா வெற்றிப் படங்களை கொடுத்த தளபதி விஜய், தற்போது மூன்றாவது முறையாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சர்க்கார் படத்தில் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ், இந்த இருவருடன் சன் பிக்சர்ஸ் என்ற பிரமாண்டமும் இணைந்துள்ளதால், எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.

சர்க்கார் திரைப்படத்தின் சில காட்சிகள் தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் என்றாலே ரசிகர்களின் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அங்கு எப்போதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விடுவார்கள். அந்த வகையில் இப்போது சர்க்கார் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாகி வருகிறது. சர்க்கார் படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த விஜய் மற்றும் நடிகை கீர்த்தி சுரேசை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு மகிழ்ச்சி முழக்கமிட்டனர். ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடி போனார் விஜய். செல்போனில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சர்க்கார் திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், ஆளப்போறான் தமிழன் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதுகிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியுடன் மேலும் பல பிரபலங்கள் இணைந்துள்ளதால் சர்க்கார் இப்போதே பி.பி.யை எகிறவைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!