அரசியல்வாதிகள் முன் கெத்தாக அமர்ந்திருக்கும் விஜய்; சர்க்கார் படத்தில் இப்படி ஒரு அதிரடியா?

 
Published : Jun 22, 2018, 02:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
அரசியல்வாதிகள் முன் கெத்தாக அமர்ந்திருக்கும் விஜய்; சர்க்கார் படத்தில் இப்படி ஒரு அதிரடியா?

சுருக்கம்

sarkar films another picture leaked

தளபதி விஜயின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கலக்கலாக வெளிவர இருக்கும் திரைப்படம் சர்க்கார். இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி இருந்தது. இரகசியமாக காக்கப்பட்டு வந்த இந்த திரைப்படத்தின் தலைப்பு,  இதுவரை ”தளபதி 62” என்றே அறியப்பட்டு வந்தது.  

நேற்று தான் இந்த திரைப்படத்தின் உண்மையான தலைப்பு அறிவிக்கப்பட்டது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை ”சர்கார்” எனும் இந்த டைட்டில் அவ்வளவாக திருப்தி படுத்தவில்லை. என்றாலும் படம் அவர்களை திருப்திபடுத்தும், என்பது அனைவரின் நம்பிக்கையுமாக இப்போது இருக்கிறது.

அதனை நிரூபிக்கும் வகையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த புகைப்படத்தில் இரண்டு அரசியல் தலைவர்களுக்கு நடுவில், விஜய் கெத்தாக அமர்ந்திருக்கிறார்.

ஏற்கனவே இருபெரும் அரசியல்வாதிகளின் இணைப்பு விழா எனும் காட்சியும், இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது. அது தொடர்பான படங்களில் கரு.பழனியப்பன், மற்றும் ராதா ரவி தான் அந்த அரசியல்வாதிகள் வேடத்தில் நடித்திருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் விஜயின் இந்த புகைப்படத்திலும், கரு.பழனியப்பன் இருக்கிறார்.

இதில் அந்த மேடையில் இருக்கும் அரசியல்வாதிகளை அலட்சியம் செய்தபடி அமர்ந்திருக்கும் விஜயின் தோற்றத்தை பார்த்து, அவர் இந்த படத்தில் ஒரு தொழிலதிபராக தான் நடித்திருக்கிறார், என உறுதியாக கூறி வருகின்றனர் கோலிவுட் வட்டாரத்தை சேர்ந்தோர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?
அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்