கேரளாவிலும் சர்கார் மேனியா !! 175 அடி உயரத்தில் விஜய்க்கு கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்கள் !!

Published : Nov 03, 2018, 09:03 AM ISTUpdated : Nov 03, 2018, 10:20 AM IST
கேரளாவிலும் சர்கார் மேனியா !!  175 அடி உயரத்தில் விஜய்க்கு கட்-அவுட் வைத்து அசத்திய  ரசிகர்கள் !!

சுருக்கம்

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வரும் 6 ஆம் தேதி தீபாவளியன்று வெளியாக உள்ள நிலையில், இது வரை இல்லாத அளவாக கேரள மாநிலத்தில் விஜய்க்கு அவரது ரசிகர்கள் 175 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து அசத்தியுள்ளனர். சர்கார் படம் திரையிடும் முன்பே பல சாதனைகளை படைத்துள்ள நிலையில், கேரளாவில் வைக்கப்பட்டுள்ள  கட்-அவுட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ரீலீஸ் ஆவதற்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்தது. பட ஆடியோ வெளியீட்டின்போது விஜய் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் சர்கார் படத்தின கதை என்னுடையது என வருண் ராஜேந்திரன் என்ற உதவி இயக்குநர் நீதிமன்றம் சென்றார். பின்னர் அது சமரசம் ஆனது. இந்தப்படம் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது

இந்நிலையில் உலகம் முழுக்க தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் சர்கார் படத்தை காண காத்திருக்கிறார்கள். தீபாவளி அன்று 80 நாடுகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழ்நாட்டில் சொல்லவே வேண்டாம் விஜய் ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் .

இதனிடையே விஜயின் கேரள ரசிகர்கள் சத்தமில்லாமல் தமிழக ரசிகர்களை விஞ்சிவிட்டனர். சர்கார் படம் ரிலீஸ் ஆவதையொட்டி திருவனந்தபுரத்தில் விஜய்க்கு 164 உயரத்தில் பிரமாண்டமான கட்-அவுட் ஒன்றை வைத்து அசத்தியுள்ளனர். இது கேரள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!