இரண்டே நாளில் ரூ.150 கோடி வசூல்! பாகுபலி, கபாலியை தூக்கி அடித்த சர்கார்!

By sathish kFirst Published Nov 8, 2018, 9:15 AM IST
Highlights

 நடிகர் விஜய் – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் – சன் பிக்சர்ஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் சுமார் 81 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக சர்கார் திரைப்படம் செவ்வாயன்று வெளியானது. படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்த காரணத்தினால் தமிழகத்தில் உள்ள 99 விழுக்காடு திரையரங்குகள் சர்கார் படத்தையே வெளியிட்டன. இதே போல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், டெல்லி என பல நகரங்களிலும் சர்கார் அதிக திரையரங்குகளில் வெளியானது.

வெளிநாடுகளிலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வழக்கத்தை விட அதிக திரையரங்குகளில் சர்கார் ரிலீஸ் செய்யப்பட்டது. ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் முதல் நாளில் ஹவுஸ் புல்லாகவே இருந்தது. அதிலும் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் சர்கார் பட்டையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும சர்கார் திரைப்படம் தீபாவளியன்று 2 கோடியே 31 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. மேலும் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் மட்டும் சர்கார் நேற்றே 32 கோடி ரூபாயை வசூலித்து கொடுத்துள்ளது. இது தமிழகத்தில் ரஜினியின் கபாலி, ராஜமவுலியின் பாகுபலி 2 ஆகிய படங்களின் வசூலை விட அதிகம் ஆகும்.

மேலும் உலக அளவிலும் சர்கார் நல்ல வசூலை பெற்றுக் கொடுத்தள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தை கடந்து கேரளாவில் ஆறரை கோடி ரூபாயும், கர்நாடகாவில் ஆறே கால் கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 4 கோடி ரூபாயும், இதர இந்திய மாநிலங்களில் ஒரு கோடி ரூபாயும் சர்கார் வசூலை குவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் சர்காரின் நேற்றைய வசூல் 50 கோடி ரூபாய் ஆகும்.

உலக அளவில் மலேசியா, சிங்கப்பூரில் 11 கோடி ரூபாயும், அமெரிக்காவில் ஐந்தரை கோடி ரூபாயும், துபாய், குவைத் போன்ற நாடுகளில் 5 கோடி ரூபாயும், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் நான்கு கோடி ரூபாயும், இலங்கையில் மூன்று கோடி ரூபாயும், ஆஸ்திரேலியாவில் ஒன்றரை கோடி ரூபாயும், இதர பகுதிகளில் ஒரு கோடி ரூபாயும் முதல் நாளில் சர்கார் வசூலித்துள்ளது.

அதாவது வெளிநாடுகளில் திரையிட்டதன் மூலம் சர்காருக்கு 31 கோடி ரூபாய் முதல் நாளில் வசூல் கிடைத்துள்ளது.இதன் மூலம் முதல் நாளில் சர்கார் சுமார் 81 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்துள்ளது. இரண்டாவது நாளான புதன்கிழமையும் சர்கார் படத்தின் காட்சிகள் அரங்கு நிறைந்து செல்வதால் தற்போது வசூல் 150 கோடியை தாண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 

click me!