இனி மணிரத்னம் படங்களுக்கு இசையமைக்கமாட்டார் ஏ.ஆர்.ரகுமான்? முறியும் 16 வருட கூட்டணி

By sathish kFirst Published Nov 8, 2018, 8:57 AM IST
Highlights

‘தளபதி’ படத்தோடு இளைராஜாவுடனான ஒன்பது வருட கூட்டணியை முறித்துக்கொண்டு ’92ல் ஏ.ஆர். ரகுமானுடன் ‘ரோஜா’ மூலம் கைகோர்த்த இயக்குநர் மணிரத்னம் ‘செக்கச்சிவந்த வானத்தோடு ’நன்றி வணக்கம்’ கூறி விடைபெறப்போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் பின்னணி இசைக்கின்றன.
 
இதற்கான வலுவான காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லையென்றாலும் ‘செ.சி.வானம் படத்தின் பின்னணி இசையமைப்பின் போது பாதிப்படம் வரை வேலை செய்த ரகுமான், படத்தில் தனக்கு ஆர்வமில்லாத சில பகுதிகளுக்கு உதவியாளர்களைக்கொண்டு பணியாற்றியதாகத் தெரிகிறது. இதில் மணி ரொம்பவே அப்செட்.

எவ்வளவு பெரிய வித்வானாக இருந்தாலும் மணியின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் நிலைய வித்வான்களுக்குத் தருவதுபோல் கசக்கிப்பிழிந்துதான் சம்பளம் தருவார்கள். ரகுமானும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ‘செ.சி.வானத்துக்கு ஒரு தொகையைக்குறிப்பிட்டு அதைக் கறாராகக் கரந்திருக்கிறார் ரகுமான். இது மணிக்கு அடுத்த அப்செட்.

எனவே தனது அடுத்த இயக்கத்துக்கு மீண்டும் இளையராஜா அல்லது புதிய இசையமைப்பாளர் என்று அரைமனசோடு அலையும் மணி, தற்போதைக்கு தனது நிறுவனம் தயாரிக்க புதுமுக இயக்குநர் தனசேகரன் இயக்கும் படத்துக்கு ‘96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவை கமிட் செய்துள்ளார்.

click me!