சினிமாவில் நடிப்பேன்... ஆனா ஒரு கண்டிஷன்? அதிரடியாகக் கூறிய சரவணா ஸ்டோர்ஸ் அருள்..!

 
Published : Jan 16, 2018, 09:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
சினிமாவில் நடிப்பேன்... ஆனா ஒரு கண்டிஷன்? அதிரடியாகக் கூறிய சரவணா ஸ்டோர்ஸ் அருள்..!

சுருக்கம்

saravana stores arul acting in movies

நடிகை ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் விளம்பரத்தில் தோன்றி, சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்த பெருந் தொழிலதிபர், சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகி அருள்.

இவர் நடித்த விளம்பரத்திற்கும் பல்வேறு பாராட்டுக்கள்  குவிந்தன. இந்நிலையில் இவர் சமீபத்தில் மலேசியாவில் நடந்த  நட்சத்திர விழாவில் கலந்துகொண்டனர். அப்போது நன்கொடையாக 2.5 கோடியை நடிகர் சங்க கட்டடம் கட்ட அள்ளிக்கொடுத்தார்.

இவரிடம் நடிகர் ஸ்ரீமன், நீங்கள் படங்களில் நடிப்பீர்களா என கேள்வி எழுப்ப... அதற்கு பதில் அளித்த அருள், கண்டிப்பாக பாசிட்டிவான கதைக்களம் அமைந்தால் திரைப்படத்தில் நடிக்க தயார் என கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

மேலும் எத்தனை ஹீரோயின்கள் உங்கள் படத்தில் நடிப்பார்கள் என கேட்டதற்கு, அதுவும் கதையை பொறுத்து தான் அமையும் என கூறினர். 

ஏற்கனவே இவர் நடித்து வெளிவந்த விளம்பரத்திற்கே பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் அதையெல்லாம் சற்றும் யோசிக்காமல் கதாநாயகனாகவும் நடிப்பேன் என்று உறுதியாக கூறும் அருளின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும்! 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி