பாவனாவை போல் நானும் பாதிக்கப்பட்டேன்.... நடிகை வரலட்சுமி ஓபன் டாக்...!!!

Asianet News Tamil  
Published : Feb 20, 2017, 03:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
பாவனாவை போல் நானும் பாதிக்கப்பட்டேன்.... நடிகை வரலட்சுமி ஓபன் டாக்...!!!

சுருக்கம்

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் கால் பதித்தவர் . இவர் கடந்த ஆண்டு வெளிவந்த' தாரை தப்பட்டை' படத்தில் நடித்ததன் மூலம் பலரது பாராடுகளையும் பெற்றார்.

இந்நிலையில் நடிகை பாவனா ஒரு சில நபர்களால் இரண்டு நாட்களுக்கு முன்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது போல தனக்கு ஒரு சில வழிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் இருந்துள்ளது என,  கடிதம் மூலமாக  தெரிவித்துள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளது  இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களை பார்த்தேன். நானும் இந்த தொல்லைகளை சந்தித்திருக்கிறேன் என்றும். ஒருமுறை நான் முன்னனி டி.வி. சேனல் அதிகாரியுடன் மீட்டிங்கில் இருந்தேன்.

முடியும் தருவாயில் அவர் என்னிடம் எப்போது வெளியே சந்திக்கலாம் என கேட்டார். நான் அவரின் ஏதும் வேலை இருக்கிறதா என கேட்டேன்.

அவர் ’இல்லை... இல்லை வேலையெல்லாம் இல்லை. மற்ற விசயங்களுக்காக’ என சூசகமாய் சொன்னார். கோபமான நான் அவரின் தயவு செய்து போயிடுங்க என்றேன். அவரும் போய்விட்டார். இதுபோல பல பெண்களுக்கு நடக்கிறது. நடிகை என்பதை தாண்டி ஒரு சக பெண்ணாக பேசுகிறேன்.

எல்லோரும் தங்களுக்கு நடக்கும் இது போன்ற இன்னல்களை கண்டு வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். நீங்கள் யாரும் பயபடக்கூடாது.

தைரியமாக இருக்கவேண்டும். பெண்களை தரக்குறைவாகவோ, பாலியல் தொந்தரவு செய்வதோ தவிர்க்கப்படவேண்டும் என கடிதம் மூலமாக கூறியுள்ளார் வரலட்சுமி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anupama Parameswaran : அம்மாடியோ!!! டைட்டான உடையில் உடலை நெளித்து நளினம் காட்டும் 'அனுபாமா' போட்டோஸ்
Iswarya Menon : அவள் உலக அழகியே!! லெகங்காவில் நடிகை ஐஸ்வர்யா மேனனின் கண்கவர் கிளிக்ஸ்!