சரத்பாபு மறைவுக்குப் பின் இந்த நிலைமையா? சொத்துகளைப் பிரிப்பதில் சொந்தங்களுக்குள் சண்டை?

Published : May 22, 2023, 10:28 PM IST
சரத்பாபு மறைவுக்குப் பின் இந்த நிலைமையா? சொத்துகளைப் பிரிப்பதில் சொந்தங்களுக்குள் சண்டை?

சுருக்கம்

ரஜினி, கமல் இருவரின் வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்ற குணச்சித்தர நடிகர் சரத்பாபு. இன்று அவர் மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தில் உறவினர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகச் பேச்சு அடிபடுகிறது.

பழம்பெரும் நடிகர் சரத்பாபு பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார். அவரது மறைவுக்குப் பின் வீட்டில் உள்ளவர்கள் மத்தியில் சொத்து தகராறு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சரத்பாபு மரணத்தால் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்படாததால், உடனடியாக ஹைதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சரத்பாபு இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவரது சகோதரி அதனை மறுத்து, சரத்பாபு நலமுடன் இருப்பதாகக் கூறினார். அதன்பிறகு தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். இச்சூழலில் இன்று மதியம் 1.32 மணியளவில் சரத்பாபு இறந்துவிட்டதாக அறிவிப்பு வந்தது.

கேரளாவில் திடீரென 1 கி.மீ. தூரம் ரிவர்சில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்!

அத்துடன் சரத்பாபு வீட்டில் சொத்து தகராறு தொடங்கியவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. சரத்பாபு மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அப்படி இருந்தும் அவருக்கு வாரிசுகள் இல்லை. சரத்பாபுவின் சொத்துக்கள், அவரது சகோதர சகோதரிகளின் குழந்தைகளுக்கு 13 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்தச் சொத்தை உறவினர்களுக்கு எழுதிக் கொடுத்த பிறகும், அவருக்குச் சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே அந்தச் சொத்துகள் யாருக்கு என்று பிரச்சினை கிளம்பி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

நீண்ட நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரத்பாபு தனது அனைத்து மருத்துவமனை செலவுகளையும் ஏற்றுக்கொண்டிருந்தார். அவர் குணமடைந்த பிறகு மீதி சொத்தை மீண்டும் தங்களுக்கு எழுதித் தருவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்; ஆனால் அவரது மரணத்தால் உறவினர்கள் மத்தியில் சொத்துச் சண்டை பெரிதாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இந்தத் தகவல்களில் உண்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்டவர்கள் சென்னையில் கூட இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகராக வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தி வந்த சரத்பாபு, திருமண வாழ்க்கையில் பின்னடைவைச் சந்தித்தார். குழந்தைகள் இல்லை என்றாலும் தனது சகோதரரின் குழந்தைகளை தனது சொந்தக் குழந்தைகள் போலவே நடத்திவந்தார். சரத்பாபுவுக்கு சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் வீடுகள், நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

முதியோருக்கான 5 வருட ஆர்.டி.க்கு 10% வட்டி வழங்கும் வங்கி!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?
அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ