சரஸ்வதி பூஜையில் களமிறங்கும் முன்னணி நடிகர்கள் படங்கள்:

 
Published : Sep 03, 2017, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
சரஸ்வதி பூஜையில் களமிறங்கும் முன்னணி நடிகர்கள் படங்கள்:

சுருக்கம்

Saraswathi pooja release in Tamil movies

பொதுவாகவே எதாவது சாதாரண சமயங்களில் படங்கள் வெளியாவதை விட விசேஷ நாட்களில் தான் பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும்.

அந்த வரிசையில் வரும் சரஸ்வதி பூஜையின் போது ரசிகர்கள் எதிர்பார்ப்பை பெற்ற பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

அதில் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வரும் 'சர்வர் சுந்தரம்'.  'தனி ஒருவன்' வெற்றிக்கு பிறகு இயக்குனர் மோகன் ராஜா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய 'வேலைக்காரன்', இயக்குனர் முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கும் 'ஸ்பைடர்' ஆகிய படங்கள் பல நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்த்த பட வரிசையில் உள்ளது.

மேலும் ஜெய் மற்றும் அஞ்சலி நடித்துள்ள திரில்லர் படமான 'பலூன்', மற்றும் இவன் தந்திரன் வெற்றிக்கு பிறகு கெளதம் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாரா ஹாரா மஹாதேவகி' ஆகிய 5 படங்கள் சரஸ்வதி பூஜை அன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்
2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி