
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை நஸ்ரியா, இவருடைய எதார்த்தமான நடிப்பு, குறும்புத்தனம் மற்றும் முக பாவனைகளால் ஒரு சில திரைப்படங்களிலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
இவர் அறிமுகமான 'நேரம்' திரைப்படம் இவருக்கு மட்டுமின்றி நிவின்பாலிக்கும் பிரேக்காக அமைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், மற்றும் 'திருமணம் எனும் நிக்கா' ஆகிய படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது.
ஆனால் திடீர் என மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்து, பட வாய்ப்புகளை தவிர்த்தார். திருமணத்திற்கு பின் இவர் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் சில நாட்கள் திரையுலகத்தை விட்டு விலகி இருக்க விரும்புவதாக தெரிவித்தார்.
தற்போது மலையாளத்தில் இயக்குனர் அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் நடிகர் ப்ரிதிவிராஜுடன் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.மேலும் துல்கர் சல்மான் நடிப்பில், மலையாளம் மற்றும் தமிழில் உருவாகும் திரைப்படத்திலும் ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பிறகும் கதாநாயகியாக நடிக்க வரும் நஸ்ரியாவிற்கு பலர் தொடர்ந்து வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.