
நடிகை அமலாபால் விவாகரத்திற்கு பின் பல படங்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் திருமணத்திற்கு முன்பை விட தற்போது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால், சம்பளத்தையும் கோடியில் தான் கேட்கிறாராம்.
கடந்த மாதம் இவருடைய நடிப்பில் வெளிவந்த, வேலை இல்லா பட்டதாரி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமலாபால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வரைபடம் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் மிகவும் அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்துவதில் இந்தியா தான் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கணிப்பின் படி வல்லரசு நாடான அமெரிக்காவே இரண்டாம் இடத்தில் தான் உள்ளது.
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அமலாபால் இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இதே போல் சமீபத்தில் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட தகவலின் படி, ஊழலில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.