
பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு, இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுத்து, இப்போது கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார்.
இவர் நாயகனாக சக்கரைகட்டி, சித்து +2, அம்மாவின் கைபேசி ஆகிய சில படங்களில் நடித்துள்ளார், ஆனால் இது வரை இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை.
பார்த்திபன் இயக்கத்தில் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளிவர உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யுடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்து சாந்தனு கூறியுள்ளார்.
அப்போது திருமணத்திற்கு பின்னர் முதல்முறையாக மனைவியுடன் தான் விருந்துக்கு சென்றது விஜய் வீட்டிற்குத்தான் என்று கூறிய சாந்தனு, விருந்துக்கு பின்னர் தான் விஜய் மற்றும் சங்கீதாவுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது சங்கீதா தன்னை பார்த்து நீங்கள் எப்பொழுதில் இருந்து விஜய்யின் ரசிகர் என்று கேட்டதாகவும் கூறினார்.
அப்போது சங்கீதாவை விஜய் இடைமறித்து 'சாந்தனு என்னுடைய ரசிகர் இல்லை, அவர் எனக்கு சகோதரர் போன்றவர்' என்று கூறியதாக சாந்தனு தெரிவித்தார்.
இதனால் விஜய்க்கு எப்போதுமே தன்னுடைய தீவிர ரசிகர் என்று கூறுபவர்களை விட தனக்கு சகோதரர் போன்றவர் என்று கூறுவதையே விரும்புவார் என்றும் சாந்தனு கூறினார்.
மேலும் விஜய் ஆரம்பகாலத்தில் சந்தித்த சோதனைகளையே தானும் தற்போது சந்தித்து வருவதாகவும், எஸ்.ஏ.சி. மகன் என்ற இமேஜ்யை உடைத்து தனக்கென ஒரு அடையாளம் தேட விஜய் முயற்சித்து வெற்றி பெற்றது போல.
தானும் தன்னுடைய தந்தையின் இமேஜ்யை விட்டு வெளிவர முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சாந்தனு கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.